நபித் தோழர்கள் வரலாறு! (நான்கு பாகங்கள்)- தமிழ்மாமணி மெஹர் ப.யூ.அய்யூப்; பக். 1719 ; ரூ. 2000 ; ரஹ்மத் பதிப்பகம், சென்னை-4; ✆ 044- 2499 7373.
திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு விரிவுரையுடன் 10 பாகங்கள், இறைத்தூதரின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியன அடங்கிய ஹதீஸ் மொழிபெயர்ப்பு 35 பாகங்கள், இஸ்லாமிய வரலாறு 6 பாகங்கள், நபிகள் நாயகம் வரலாற்றைத் தொடர்ந்து இறைத்தூதரின் உற்ற தோழர்களான அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான்(ரலி), அலீ (ரலி) ஆகிய நால்வரின் வரலாற்றை வெளிக்கொணர்ந்திருக்கிறது ரஹ்மத் பதிப்பகம்.
இஸ்லாமிய சிந்தனையாளர்கள் திருக்குர் ஆனுக்கும், ஹதீஸுக்கும் அடுத்தபடியாகப் போற்றி மகிழ்வது நபித் தோழர்களின் வரலாறுகள். அவர்கள் நால்வரையும் முறையே அதிசயத் தோழர், உன்னத ஆளுநர், ஒப்பற்ற வள்ளல், அறிவின் நுழைவாயில் என்று அடையாளப்படுத்திய பெருமை "கவிக்கோ' அப்துல் ரஹ்மானைச் சாரும்.
மொழிபெயர்ப்புத் துறையில் 30 ஆண்டுகளுக்கும் அதிகமாக ஈடுபட்டு, ஏறத்தாழ அரை லட்சத்துக்கும் அதிகமான பக்கங்களை மொழிபெயர்த்திருக்கும் பெருமை ரஹ்மத் பதிப்பகத்துக்கு உண்டு. ஆதாரபூர்வமான மூலநூல்களை அடிப்படையாகக் கொண்டு அவை வெளியிடப்படுகின்றன.
நபித் தோழர்கள் நால்வரின் வரலாறும் சென்னை புதுக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த மெஹர் ப.யூ. அய்யூப்பால் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. மேடைப்பேச்சாளர், எழுத்தாளர், திறனாய்வாளர் என்கிற பெருமைகளுக்கு உரித்தான அவரது மொழியாக்கம், நல்ல தமிழில் அரபி வார்த்தைகளை முல்லைச் சரம் தொடுத்தாற்போல இணைத்து வழங்கியிருப்பது தனிச் சிறப்பு.
தனிச்சிறப்புகள் கொண்ட நால்வரின் வாழ்க்கையும், மனித இனத்துக்கு வெவ்வேறு விதமான செய்திகளைத் தருகிறது. உலகப் பேரொளி நபிகள் நாயகத்தின் வரலாற்றை, நபித் தோழர்கள் வரலாற்றைத் தெரிந்து கொள்ளாமல் தனித்துப் பார்ப்பது இயலாது. அதனால்தான் நான்கு புத்தகங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

உரத் தட்டுபாடு குறித்து ஆலோசனை: மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான்

வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு வந்த இமயமலை கருப்பு கரடி, சிறுத்தை பூனைகள்

பிரதமா் மோடியின் திருச்சி வருகைக்குப்பின் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும்: பாஜக

தூத்துக்குடியில் லாரி ஷெட் உரிமையாளா் கொலை
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

