சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

DIN

அரசாட்சியில் மனசாட்சி - ஓர் அரசுப் பணியாளர் சங்க போராளியின் சுயசரிதை - வெ. சுப்பிரமணியன், எழுத்தாக்கம் கா.சு.வேலாயுதன்; பக் 360; ரூ.360; கதை வட்டம், கோவை - 42; ✆ 9994498033.

பொள்ளாச்சி கிணத்துக் கடவு அருகேயுள்ள செல்லப்பக்கவுண்டன் புதூரில் 1951-ஆம் ஆண்டு டிச. 5-இல் பிறந்தவர் வெ.சுப்பிரமணியன். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் கல்லூரி படிப்பை முடித்தநிலையில்,  ரயில்வேயில் பணி கிடைத்தது.  மக்கள் பணி செய்ய வேண்டும் என்ற தனது தாயின் விருப்பத்துக்காக  டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியை தொடங்கி,  அரசாட்சியில் அர்ப்பணித்துக் கொண்ட அவரது வாழ்வியல் பயணம் சுயசரிதையாக உருவாகியுள்ளது.

பணி ஓய்வு பெறும் வரை சந்தித்த பல்வேறு பிரச்னைகள், சவால்கள், அரசியல் இடையூறுகள், செல்வாக்கு மிக்கவர்களின் குறுக்கீடுகள் ஆகியவற்றுக்கு மத்தியில் நேர்மையான அதிகாரியாக நெருப்பாற்றில் நீந்தி அரசுப் பணியில் தனது பயணத்தை எப்படி கடந்தார் என்பதை விளக்கியுள்ளார்.

குழந்தைத் தொழிலாளர் முறை  ஒழிப்பு, ஆக்கிரமிப்புகள் அகற்றம் போன்ற மக்கள் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொள்ளும்போது நேரிட்ட அனுபவங்கள் வருவாய்த் துறை சார்ந்த பணி என்பதால் ஏற்படும் சவால்களைக் கையாண்ட விதம், முதல் பணியிலே 10 ரூபாய்  லஞ்சம் கொடுக்க வந்தவரை நாசூக்காக மறுத்து அனுப்பி வைத்தது முதல் கொண்ட கொள்கையில் விலகாமல் பணியாற்றியது .. எனப் பல அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

மனசாட்சியோடு அரசுப் பணியில் செயல்பட வேண்டியவர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளையும் பொதுவாழ்வு நடைமுறைகளையும் ஓர் அரசு ஊழியனாய் புத்தகத்தில் அனுபவ பிழம்பாய் பதியவைத்திருக்கிறார். ஒவ்வொரு அரசுப் பணியாளரும் படித்தறிய வேண்டிய பட்டறிவு நூல் இது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.