திருமந்திரம் ஓர் அனுபவம் - உரையாசிரியர்: புலவர் கே.ஏ. இராஜூ; பக். 1040; ரூ.1100; கே.ஏ. இராஜூ, சென்னை - 19; ✆ 94444 43821.
திருமூலர் அருளிச்செய்த திருமந்திரம், உயிர்கள் தூய்மையடைந்து, பக்குவப்பட்ட நிலையில் இறைவனுடன் இயைவதை மூவாயிரம் பாடல்களில் விரிவாக விளக்குகிறது. இது பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாகப் போற்றப்படுகிறது.
ஒன்பது தந்திரங்களும், நந்திதேவரிடமிருந்து திருமூலர் பெற்ற ஒன்பது ஆகமங்களில் சாரம் என்பர். ஆன்மிக வாழ்வின் அடிப்படை நெறிகளான சரியை, கிரியை, யோகம், ஞானம் இவற்றை சிறப்பாக விளக்குகிறது திருமந்திரம்.
பொதுப்பாயிரத்தில் கடவுள் வாழ்த்து, வேதச் சிறப்பு, ஆகமச் சிறப்பு, வான் சிறப்பு, அரசாட்சி முறைமை, அறம் செய்வான் திறம் உள்ளிட்ட 11 பகுதிகள் நூலில் இடம்பெற்றுள்ளன. அடுத்துள்ள தற்சிறப்புப் பாயிரத்தில் குரு பரம்பரையும், திருமூலரின் தன் வரலாறும் இடம்பெற்றுள்ளது. சிறப்புப் பாயிரத்தில், குரு மடத்தின் வரலாறும், திருமந்திரத் தொகை சிறப்பும் கூறப்பட்டுள்ளது.
ஒன்று முதல் ஒன்பது தந்திரங்கள் வரை வரிசையாக இடம்பெற்றுள்ளன. முதலாம் தந்திரத்தில் உள்ள நிலையாமை, கொல்லாமை, நல்குரவு, கல்வி, நடுவுநிலைமை, கள்ளுண்ணாமை போன்ற தலைப்புகள் மட்டுமல்லாது அவற்றில் இடம்பெற்றுள்ள பாடல்களின் கருத்துகளும் பெரும்பாலும் திருக்குறள் கருத்துகளையொட்டியே அமைந்துள்ளன.
இன்று பலரும் அடிக்கடி பயன்படுத்தும் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்', 'அன்பே சிவம்', 'என்னை நன்றாய் இறைவன் படைத்தனன் தன்னை நன்றாய் தமிழ்ச் செய்யுமாறே', 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' போன்ற தொடர்கள் திருமந்திரத்தில் இடம்பெற்றுள்ளவையே.
சைவ சமயத்தின் சாத்திர நூலாக மட்டுமல்லாது தோத்திர நூலாகவும் விளங்கும் திருமந்திரத்தைக் கற்றுப் பொருளுணர இந்நூல் பெரிதும் உதவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

99% வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்: உதயநிதி ஸ்டாலின்

வரும் தோ்தலில் அதிமுக கூட்டணிக்கு மூன்றாவது இடம்தான் கிடைக்கும்: கரூா் எம்.பி. ஜோதிமணி

வாகனம் மோதியதில் திமுக நிா்வாகி உயிரிழப்பு
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

