கோபுலு - எஸ்.சந்திரமெளலி; பக்.136; ரூ.150; அபிநயா பிரசுரம் , சென்னை-17; ✆ 9791071218.
பிரபல ஓவியர் கோபுலுவின் நினைவுக் குறிப்புகள் அடங்கிய நூல் இது. அவரது சுருக்கமான சுயசரிதை என்றே கூறலாம்.
கோபுலு சிறுவனாக இருந்தபோது தொடங்கிய ஓவிய ஆர்வமானது பயிற்சி பெற்று ஆனந்த விகடன் வார இதழில் படம் வரைய வாய்ப்பு பெற்றது முதல் ஓய்வுக் காலம் வரையிலான அனுபவ ஏடுகள் நம் கண் முன்னே விரிகின்றன.
அத்துடன் கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் நிலவிய அன்றைய தமிழக வாழ்க்கையையும் நம் கண் முன் தத்ரூபமாக காட்சியளிக்கின்ற வரலாற்றுப் பதிவாகவே தொகுத்து அளிக்கிறார் நூலாசிரியர்.
தந்தையுடன் வடநாட்டில் மேற்கொண்ட யாத்திரையின்போது மான் தோல் வாங்கிய கதை நல்ல நகைச்சுவை. இவ்வாறு பல நகைச்சுவையான சம்பவங்கள் அபாரம்.
தீபாவளி மலர் தயாரிப்பின்போது ஓவியங்கள் தீட்டுவதற்காக திருவையாறு தியாகையர் நினைவிட தல யாத்திரையும் பிற பிரபல தல தரிசனங்களும் அருமையான ஃபிளாஷ்பேக்.
ஜெயலலிதாவின் ஆரம்ப கால 'ராசி சில்க்' விளம்பரத்தை உருவாக்கியதும், 'ட்ரீம் கேர்ள்' என்ற ஹேமமாலினியின் ஆரம்ப கால விளம்பரத்தை வடிவமைத்ததும் கோபுலு என்பதெல்லாம் வியப்புச் செய்தி.
'தில்லானா மோகனாம்பாள்', 'வாஷிங்டனில் திருமணம்' ஆகிய கதைகள் தொடராக வெளிவந்தபோது, கோபுலுவின் தனித்துவமான ஓவியங்களும் வெகுவாகப் புகழ்பெற்றன.
ஓவிய வகைகளில் தனக்கென சொந்தமான ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு, ஒரு விளம்பர நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாகவும் நடத்திய கோபுலுவின் நினைவுக் குறிப்புகள் தன்னம்பிக்கை ஊட்டுவதாக உள்ளன. இதழியல் ஆர்வலர்களுக்கு ஒரு தகவல் பொக்கிஷம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
பேல்பூரி

உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்: டிரம்புக்கு கமல் கடிதம்!
டெக்ஸ்லா முதல் தோற்ற போஸ்டர்!
மணிப்பூரில் பழங்குடியினர் பாதிக்கப்பட்டபோது அமைதி காத்த குடியரசுத் தலைவர் எங்களைக் குறிவைப்பது ஏன்? - மம்தா
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

