கூட்டலும் கழித்தலும் - பேரா. மா.நயினார்; பக். 274; ரூ.300; காவ்யா, சென்னை-24; ✆ 044- 2372 6882.
கரோனா பொதுமுடக்கக் காலத்தில் நூலாசிரியர் 'நோக்கர்' என்ற தளத்தில் பதிவிட்ட சொல்லாய்வு குறிப்புகளே நூலாகியுள்ளது.
தமிழ், மலையாளம் என இருமொழிச் சொற்களில் இருக்கும் ஒற்றுமை, வேற்றுமைப்படுதலை சொற்பொருள் ஆராய்ச்சி, சொற்பிறப்பியல் ஆராய்ச்சி மொழி ஓப்பீடு, நாட்டார் வரலாற்றுச் செய்திகள் போன்றவற்றுடன் சுவைபட- நகைச்சுவை கலந்து எழுதியிருப்பது படிக்கச் சுவையைக் கூட்டுகிறது.
மலையாளத்தில் 70 சதவீதம் வடமொழிச் சொற்களும், 30 சதவீதம் தமிழ்ச் சொற்களும் கலந்திருப்பதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். தமிழ்ச்சொற்கள் ஒருபொருளையும் மலையாளத்தில் வேறுபொருள் வழங்கப்படுவதையும் விரிவாக எழுதியுள்ளார்.
'அரி'- தமிழில், 'சொறி' என்ற பொருளுடன் ஒட்டி நிற்க; மலையாளத்தில் சல்லடை ஆகிறது. 'அடைகுடி' என்றால் குடும்பத் தலைவன் தமிழில் மலையாளத்தில் புணைப்பட்டவர்கள். அந்திசந்தி தமிழில் மாலை நேரம்- மலையாளத்தில் சந்தி என்பார்கள்.
'அர்த்த ஸெளஸமும் ஆத்ம ஸெளஸமும் (உத்தரமேரூர் கல்வெட்டில் வேட்பாளர் தகுதிகள்) தமிழில் மனத்தூய்மை. தேடிய செல்வம் தூய்மையான முறையில் இருக்க வேண்டும் என்கிறது கல்வெட்டு. சௌஜாலயம் என்பது மலையாளத்தில் கழிவறை.
அவசரம்- தமிழில் விரைவு- மலையாளத்திலோ வாய்ப்பு. அவகாசம் - தமிழில் காலத்தைக் குறிக்கும். மலையாளத்தில் 'உரிமை' என்ற பொருள்படுகிறது. இவ்வாறு 100-க்கும் மேற்பட்ட பொருள்களுக்கு விளக்கங்கள் அளித்துள்ளார் நூலாசிரியர். மொழி ஆய்வாளர்களுக்கு பயன்படும் நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
ஜம்முவில் 10 வயது மகளை கொன்று தலைமறைவாான தந்தை தில்லியில் கைது

கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் தேவை!

திமுக விளம்பரப் பதாகை கிழிப்பு: போலீஸாா் வழக்குப் பதிவு
வடமாநில இளைஞா்களை தாக்கி கைப்பேசி, பணம் பறித்த மூவா் கைது
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

