உலகெங்கும் கலைஞர் (உலகத் தமிழர்களின் புகழஞ்சலி); - (தொகுப்பாசிரியர்) வி.ஆர்.எஸ்.சம்பத்; பக்.224; ரூ.300; சட்டக் கதிர் பப்ளிகேஷன்ஸ், 3/2 சுவாதி ராம் டவர்ஸ். ஜூபிடர் காம்ப்ளக்ஸ், 3 துர்காபாய் தேஷ்முக் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28.
திமுக தலைவர் கருணாநிதி குறித்து தனித்துவத்தோடு வெளிவந்துள்ள நூல்களில் இதுவும் ஒன்று. 2020-ஆம் ஆண்டில் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவாக காணொலிக் கருத்தரங்கை நடத்தி, உலகத் தலைவர்கள் ஆற்றிய உரைகளைத் தொகுத்து ஓர் நூலாக நூலாசிரியர் வெளியிட்டுள்ளார்.
கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு, அவரது சாதனைகள், தமிழ்த் தொண்டுகள், அரசியல் ஆளுமைத் திறன் போன்றவற்றை உடனிருந்தவர்களின் அனுபவம் வாயிலாகவே நூலில் அறிய முடிகிறது. நூலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அணிந்துரை எழுதியுள்ளார்.
புதுவை வே.நாராயணசாமி, கி.வீரமணி, துரைமுருகன் போன்ற ஆளுமைகளோடு, மலேசிய முன்னாள் அமைச்சர் சாமிவேலு, வெளிநாடுகளின் அமைச்சர்களான கயானாவின் மோசஸ் வீராசாமி, மொரீஷியஸின் பரமசிவன் பிள்ளை, தென்ஆப்பிரிக்காவின் ரவி பிள்ளை, மலேசியாவின் டாக்டர் டி.மாரிமுத்து மற்றும்ஆஸ்திரியாவின் வி.ஜெயமாலை, சிங்கப்பூரின் ஆர்.ரவீந்திரன், அமெரிக்காவின் ராஜன் நடராஜன், ஆஸ்திரேலியாவின் சூசை பெஞ்சமின் போன்ற வெளிநாட்டு ஆளுமைகள் பேச்சுகளின் வாயிலாக, வெளிநாட்டுத் தமிழர்களின் நலனில் கருணாநிதி கொண்டுள்ள நலனை உணர்வுபூர்வமாக அறிய முடிகிறது.
நூலின் பிற்சேர்க்கையில் கருணாநிதியின் அரிய புகைப்படங்களையும் சேர்த்திருப்பது நூலுக்கு மேலும் மெருகூட்டுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளம்: மதுபோதையில் பாம்பை பாக்கெட்டில் வைத்து டீ கடைக்குச் சென்ற இளைஞர்!
ராஷ்டிரிய சரண்டர் சங்கம் ஆர்எஸ்எஸ்: ராகுல் விமர்சனம்

தேர்தல் அலுவலர்களுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்ததாக புகார்!

கூடுதல் நேரத்தில் கோல் அடித்த ரியல் பெட்டிஸ்..! முதலிடத்துக்கான வாய்ப்பை இழக்கும் ரியல் மாட்ரிட்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

