/

கண்டேன்! கண்டறியாதன கண்டேன்!! கண்ணதாசம்

News image
Updated On :6 நவம்பர் 2023, 2:32 pm

கண்டேன்! கண்டறியாதன கண்டேன்!! கண்ணதாசம் - வி.சுந்தரம்;  பக்.276; ரூ.250; தி ரைட்டிங் பப்ளிஷிங், சென்னை-17; ✆ 044- 2433 2682.

1944-இல் காரைக்குடி அருகேயுள்ள சிறுகூடற்பட்டியில் பிறந்த கண்ணதாசன் திரையுலகில் தன்னிகரில்லா சாதனைகளைப் படைத்தவர். கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், நடிகர், ஆன்மிகவாதி, அரசியல்வாதி உள்பட பல்வேறு முகங்களைக் கொண்டவர். அவரைப் பற்றி பல்வேறு நூல்கள் வெளிவந்திருந்தாலும்,  இந்த நூலில் அவர் மீதான நல்ல விஷயங்களோடு, விமர்சனங்களையும் முன்வைக்கிறது.  'என்னைப் பற்றிய விமர்சனத்தை அடுத்த தலைமுறைக்கு விட்டுவிடுங்கள்' என்று கூறி, தன்னைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார் கண்ணதாசன் என்கிறார் நூலாசிரியர். 

'ஒருவர் ஒரு துறையில் சாதிப்பதற்கு முயற்சி இருந்தால் போதும்; ஒருவரே பல துறைகளிலும் புலமை பெற்று அனைத்திலும் வெற்றி பெறுவது உலகில் கண்ணதாசனால் மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது' என்ற நூலாசிரியரின் கூற்று, சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் நல்லதொரு மேற்கோள்தான். ஒவ்வொரு துறையிலும் அவரது வளர்ச்சியை படிக்கும்போது, பிரமிக்க வைக்கிறது.

கண்ணதாசனை அரசியல்வாதியாக, ஆன்மிகவாதியாக, இலக்கியவாதியாக, ஈகைகுணம் மிக்கவராக, உழைப்பாளியாக, ஊர்போற்றும் வல்லவராக, எதிர்வரும் தலைமுறையும் எதிர்நோக்கி அறிபவராக.. என பல்கலை வித்தகராக அறிய உதவும் நூல். இந்த நூல் ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கான வழிகாட்டி நூல் என்றே சொல்லலாம்.  கண்ணதாசனை பற்றி தமிழ் உலகம் அறிய வேண்டியது அவசியம். வாசிக்க வேண்டிய அற்புத நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.