கால்களின் தவம் தேக்வாண்டோ (ஒலிம்பிக் விளையாட்டில் உள்ள தற்காப்புக் கலை) - மாஸ்டர் சே.லோகராஜ்; பக்.176; ரூ.250; பெ.சேகர் வெளியீடு, சென்னை-14; ✆ 94442 45139.
'தேக்வாண்டோ' எனும் தற்காப்பு வீரகலையை வடிவமைத்து, மனித ஆற்றல் முழுவதையும் ஒருசேரப் பயன்படுத்தும் வீரவிளையாட்டாக கொரிய நிபுணர் அளித்துள்ளார்.
இளம்வயதிலேயே சாதனைகளைப் புரிந்த நூலாசிரியர் இந்த விளையாட்டின் முக்கியத்துவம், மருத்துவப் பயன்கள், அவசியம் குறித்து அதற்குரிய செயல்விளக்கப் படங்களுக்காகத் தானே மாடலாக உருவாகி எழுதியுள்ளார். கணினியில் பக்க வடிவமைப்பாளராகப் பணிபுரியும் இவர், தேக்வாண்டோ குறித்து பாமரருக்கும் புரியும் வண்ணம் எளிய தமிழில், நல்ல விளக்கப் படங்களுடன் நூலை அழகுற கொண்டுவந்துள்ளார்.
தண்டால், டைட் சிட்டப்ஸ், ஏரோபிக், அன்ஏரோபிக், பிரி கிக், அரைவட்ட கிக், கோடரி உதை, முன் உதை, திருப்புமுனை உதை, பக்க உதை, ஹுக்கிங் கிக், ஸ்பின்னிங் ஹீக்கிங் கிக், பின்பக்க உதை, துள்ளுதல் பின்பக்க - முன் உதை, துள்ளுதல் பறந்த நிலை முன்உதை, பறந்தநிலை திருப்புமுனை உதை, பறந்த நிலை பக்க உதை, துள்ளுதல் சுழற்சி வளை உதை, துள்ளுதல் இருகால் முன் உதை, கால்களால் தாக்கப்படும் குறிப்புகள் என 26 தலைப்புகளில் தேக்வாண்டோ விளையாட்டை சிறந்த முறையில் கற்க நல்லதொரு பயிற்சியாளராகவே இந்த நூல் விளங்கும் என்பதில் ஐயமில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளம்: மதுபோதையில் பாம்பை பாக்கெட்டில் வைத்து டீ கடைக்குச் சென்ற இளைஞர்!
ராஷ்டிரிய சரண்டர் சங்கம் ஆர்எஸ்எஸ்: ராகுல் விமர்சனம்

தேர்தல் அலுவலர்களுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்ததாக புகார்!

கூடுதல் நேரத்தில் கோல் அடித்த ரியல் பெட்டிஸ்..! முதலிடத்துக்கான வாய்ப்பை இழக்கும் ரியல் மாட்ரிட்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

