புதுவை நாட்டுப்புறவியல் ஓர் அறிமுகம் - ஆ.திருநாகலிங்கம்; பக். 341;ரூ.275; செல்வி பதிப்பகம், புதுச்சேரி-605 004; ✆ 94423 55573.
பாரம்பரியம் மிக்க தமிழர்கள் வாழ்வில், நாட்டுப்புறவியல் முக்கியத்துவம் வாய்ந்தது. உழைப்பில் விளைந்து, உணர்வுகளின் வடிகாலாய், பண்பாட்டின் அடையாளமாய் வலம் வரும் 'நாட்டுப்புற வழக்காறுகள் தொழில், உழைப்பு, சடங்குகள், வழிபாடு, விழாக்கள், கொண்டாட்டங்கள் என வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தன்னை முன்னிறுத்தி மனித குலத்தை அரவணைத்து உலகத்தோடு ஒட்ட ஒழுகச் செய்யும் பணியைத் திறம்பட மேற்கொள்ளும் சூட்சுமத்தைத் தன்னகத்தோடு கொண்டவை' என்கிறார் நூலாசிரியர்.
மொழி, மதம், இனம், நாடு சார்ந்த ஒரு கலப்புப் பண்பாட்டிலும் நாட்டுப்புற வழக்காறுகளை இனம் பிரித்துக் காட்ட முடியும் என்பதே இந்த நூல் உணர்த்தும் செய்தி.
நாட்டுப்புறப் பாடல்கள், கதைகள், கதைப்பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள், தெருக்கூத்து, கழைக்கூத்து, வில்லுப்பாட்டு உள்ளிட்டவை குறித்து விரிவான சான்றுகளுடன் இந்த நூலில் ஆசிரியர் எடுத்துரைத்துள்ளார்.
புதுவைப் பகுதியில் திரௌபதி அம்மன் வழிபாடு, பஞ்ச பாண்டவர்களை அழிக்க அரக்கு மாளிகையைக் கொளுத்தும் சடங்கு, பகாசுரன் வதம், அர்ச்சுனன் தபசு, படுகளம், அரவான் களப்பலி, காத்தான் கழுவேற்றம், மயானக் கொள்ளை போன்றவற்றையும், பிரெஞ்சுக்காரர்கள் விட்டுச் சென்ற பெத்தாங் விளையாட்டு, மஸ்கராத் ஆட்டம், வடக்கத்திப் பாணி, தெற்கத்திப் பாணி, மேற்கத்திப் பாணித் தெருக்கூத்துகளில் புதுவையில் தெற்கத்திப் பாணி போன்றவற்றையும் இந்த நூலின் வழியாக நல்ல முறையில் அறியலாம்.
தாலாட்டு, சிறுவர், தொழில், காதல், பக்தி, ஆட்டம், ஒப்பாரி பாடல்களும், குடும்பம், தேவதை, புராணம், பயணம், விலங்கு, நீதிக் கதைகளும் இடம்பெற்றிருப்பது இளம்தலைமுறையினருக்கு நல்லதொரு வழிகாட்டுதல்தான்.
தமிழர் கலாசாரத்தை அறிய விரும்புவோர் வாசிக்க வேண்டிய நல்லதொரு நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளம்: மதுபோதையில் பாம்பை பாக்கெட்டில் வைத்து டீ கடைக்குச் சென்ற இளைஞர்!
ராஷ்டிரிய சரண்டர் சங்கம் ஆர்எஸ்எஸ்: ராகுல் விமர்சனம்

தேர்தல் அலுவலர்களுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்ததாக புகார்!

கூடுதல் நேரத்தில் கோல் அடித்த ரியல் பெட்டிஸ்..! முதலிடத்துக்கான வாய்ப்பை இழக்கும் ரியல் மாட்ரிட்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

