/

காற்றில் வாழும் காவியக் கவிஞர்

News image
Updated On :30 அக்டோபர் 2023, 2:08 pm

காற்றில் வாழும் காவியக் கவிஞர் - கே. இளந்தீபன்; பக். 216; ரூ.500; தங்க வைரம் பதிப்பகம், கும்பகோணம்-614 208;  ✆ 94884 22505.

கவிஞர் வாலி குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு இதழ்களில், பல்வேறு ஆளுமைகளால் பதிவு செய்யப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். கவிக்கோ அப்துல் ரகுமான், இயக்குநர் கே. பாலசந்தர், துக்ளக் ஆசிரியர் சோ, இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன், கவிஞர் வைரமுத்து,  கவிஞர் நெல்லை ஜெயந்தா, நல்லி குப்புசாமி செட்டியார், கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் காசி முத்துமாணிக்கம், இயக்குநர் எஸ். பி. முத்துராமன், கவிஞர்கள் நா.முத்துக்குமார்,  பழநிபாரதி, பா. விஜய், 'நக்கீரன்'  கோபால் உள்ளிட்ட ஆளுமைகளின் பதிவுகள் நூலுக்கு கனம் சேர்க்கின்றன.

பல்லாயிரக்கணக்கான திரைப்படப் பாடல்களை எழுதிய கவிஞர் வாலி, 'நானும் இந்த நூற்றாண்டும்' என்ற சுயசரிதை நூல் உள்பட 'அவதார புருஷன்', 'பாண்டவர் பூமி', 'ராமானுஜ காவியம்', 'கிருஷ்ண விஜயம்', 'கலைஞர் காவியம்', 'கிருஷ்ண பக்தன்', 'வாலிப வாலி', 'அம்மா', 'நிஜ கோவிந்தம்' உள்ளிட்ட பல நூல்களையும் எழுதியுள்ளார்; 'கலியுகக் கண்ணன்', 'காரோட்டி கண்ணன்', 'ஒரு கொடியில் இரு மலர்கள்', 'சிட்டுக்குருவி', 'ஒரே ஒரு கிராமத்திலே' உள்பட 17 படங்களுக்கு திரைக்கதை-வசனம் எழுதியுள்ளார். 'பொய்க்கால் குதிரை', 'சத்யா', 'பார்த்தாலே பரவசம்', 'ஹேராம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். 'வடை மாலை' என்ற ஒரு படத்தை வாலி இயக்கியுள்ளார்  என்பன போன்ற பல தகவல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.