சிவ தாண்டவம்
இந்து மதம், கலை, கலாசாரம், வரலாறு ஆகிய துறைகளில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இந்த நூல் ஒரு பொக்கிஷம்.

சிவ தாண்டவம் - ஆனந்த குமாரசுவாமி (தமிழில் - பி.ஆர்.மகாதேவன்); பக். 216; ரூ.250; கிழக்கு பதிப்பகம், சென்னை -14; ✆044-4200 9603.
மனித குல நன்மைக்கு இந்தியா அளித்த கொடை, கலை குறித்து இந்துப் பார்வை, பெüத்த கலைப் பார்வை, இந்திய இசை, அறிவார்ந்த சகோதரத்துவ சமூகம், சிலைகள், இளைய இந்தியா என இந்தியக் கலைகள், கலாசாரம் குறித்த 14 கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். அதிலும் சிவதாண்டவம், இந்தியாவில் பெண்கள் நிலைமை ஆகிய இரு கட்டுரைகளும் மிகுந்த கவனம் பெறுகின்றன.
சிவனுடைய தாண்டவத்தின் மூலாதாரம் எதுவாக இருந்தாலும், காலப்போக்கில் மதம் அல்லது கலை உலகம் முன்வைக்கும் மிகத் தெளிவான சித்திரமாகவும் குறியீடாகவும் அது ஆகிவிட்டது. சிவனின் பல்வேறு நடனங்களில் மூன்று முக்கிய நடனங்கள் குறித்து விளக்கி, அதில் சிதம்பரத்தில் பொன்னம்பல மேடையில் நடராஜர் ஆடிய நடனமே நமது அக்கறைக்கு உரியது என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
தகுந்த பாதுகாப்பும், செல்வமும் தருவதாக முகலாய மன்னர் அக்பர் உறுதியளித்த பின்பும் தன்னிச்சையாக உடன்கட்டை ஏறிய இந்தியப் பெண்கள் குறித்த தகவல்கள் உணர்ச்சிகரமானவை. சுய விருப்பத்துடன் உடன்கட்டை ஏறிய இந்தியப் பெண்கள் குறித்த ஆங்கிலேய அதிகாரிகளின் கருத்தையும் இந்நூல் பதிவு செய்துள்ளது.
பழங்காலத்தில் பெண்களுக்கு இருந்த உண்மையான சுதந்திரத்தை நவீனப் பெண்களின் பொய்யான சுதந்திர சிந்தனையுடன் ஒப்பிட்டு நூலாசிரியர் தெரிவிக்கும் கருத்துகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மரபுக்கும் நவீனத்துவத்துக்கும் இடையே பாலம் அமைத்தது போன்று நூலாசிரியரின் சித்தனைத் துளிகள் பெருவெள்ளமாக நூல் முழுவதும் பாய்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...