எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

நாமும் நாடும்

இந்த நூல் இளைஞர்கள் மத்தியில் ஒரு சமூக மாற்றத்துக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2024, 1:28 pm

DIN

நாமும் நாடும் - கா.கணேசன்; பக்.144; ரூ.150; மண், மக்கள், மனிதம் வெளியீடு, மதுரை - 625016; ✆98656 28989.

உலகம் முழுவதும் சமகாலத்தில் நிலவும் பிரச்னைகளை பல்வேறு தளங்கள் மூலம் வெளிக்கொண்டு வரும் நூலாசிரியர், பல்வேறு இதழ்களில் வெளிவந்த மனித உரிமைகள், குழந்தை உரிமைகள், நலிவடைந்தோர் உரிமைகள், கல்வி உரிமைகள் பற்றி இந்நூல் பேசுகிறது.

ஒவ்வொரு கட்டுரையிலும் கல்வி, பொருளாதாரம், தனிமனித உரிமை மூலம் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கான வழிமுறைகளை புள்ளி விவரங்களுடன் கொடுத்துள்ளார் நூலாசிரியர்.

முதல் அத்தியாயத்தில், கடந்த எழுபது ஆண்டுகளில் மனித உரிமை பிரகடனத்தின் சாதனை, அதன் முன் நிற்கும் சவால்கள் குறித்து விவரிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் உலக அரங்கில் இந்தியாவின் மனித உரிமை செயல்பாட்டையும், பாரபட்சத்தையும் நூலாசிரியர் அழுத்தமாகக் கூறியுள்ளார். தொடர்ந்து, பொள்ளாச்சியில் மறைக்கப்பட்ட உண்மைகள், கரோனா காலத்தால் ஏற்பட்ட வறுமை மற்றும் புலம்பெயர்வு, உணவுப் பாதுகாப்பு என சமூகத்தின் அவல நிலையை காட்சிப்படுத்தியுள்ளார்.

இந்நூல் குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு. எது கல்வி? எனும் கேள்வியுடன் பள்ளியில் குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறை, அவர்

களுக்கு எதிரான வன்முறை, உரிமைகள், அதற்கான தீர்வையும் நூலாசிரியர் முன்வைத்துள்ளார்.

இறுதி அத்தியாயம் தமிழ்நாட்டின் கல்வி முறையின் நிறை, குறைகளையும், பள்ளி மேலாண்மைக் குழுக்களை செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தையும் கூறுகிறது.

மனித உரிமையின் முக்கியத்துவத்தை சிறு சிறு கட்டுரைகள் மூலம் எளிய மொழிநடையில் அமைத்துள்ளது மிகவும் சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.