எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

அயோத்யா ஸ்ரீ ராமர் கோயில் இயக்கம்

பிரம்மாண்டமான ராமர் கோயில் எழுப்பப்பட்டுள்ள நிலையில், அதன் பின் உள்ள சரித்திரத்தைத் தெளிவாகக் கூறும் நூல்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2024, 10:38 am

DIN

அயோத்யா ஸ்ரீ ராமர் கோயில் இயக்கம் - பாஜக வெள்ளை அறிக்கை - தொகுப்பு வானமாமலை; பக். 252; ரூ.275; அல்லயன்ஸ், சென்னை-4; 044-24641314.

ராமர் பிறந்த இடத்தில் கோயிலை மீட்பதற்காக 16-ஆம் நூற்றாண்டில் தொடங்கிய போராட்டம் 21-ஆம் நூற்றாண்டில் சட்டபூர்வமாக நிறைவடைந்தது. நாட்டின் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் பிரம்மாண்டமான கோயில் எழுப்பப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து அன்றைய மத்திய அரசு ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. பின்னர், பாஜகவும் வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. ஆங்கிலேய ஆட்சிக் கால அரசியல், சமகால அரசியல் பின்புலம் சுருக்கமாக முதல் அத்தியாயத்தில் அலசப்படுகிறது. அடுத்தடுத்த அத்தியாயங்களில் 1980, 90-களின் அரசியல் நிகழ்வுகள், பல்வேறு அமைப்பினரின் மீட்பு முயற்சி நடவடிக்கைகள், சட்டப் போராட்டங்கள் வரிசையாகத் தரப்பட்டுள்ளன.

பாபர் காலத்திலிருந்தே போர் ராஜதந்திரம் மூலம் புனிதத் தலத்தை மீட்கும் முயற்சி.

ஆங்கிலேயர் சட்டபூர்வமாக 1885-இல் தங்கள் ஆட்சியை நிறுவிய காலந்தொட்டு சட்ட நடவடிக்கைகள் மூலம் புனிதத் தலத்தை மீட்கும் முயற்சி, வெகுஜன இயக்கமாக மாறிய மீட்பு முயற்சி என மூன்று கட்டங்களாக நடைபெற்ற போராட்டம் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

ராமஜென்மபூமியில் அமைந்த பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு வழக்கு விவகாரங்கள் பரபரப்பை ஏற்படுத்திய காலகட்டமான 1993-இல் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் அனைத்துப் பின்னணி விவரங்களும் 10 அத்தியாயங்களாகத் தரப்பட்டுள்ளன. சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்து இன்று பிரம்மாண்டமான ராமர் கோயில் எழுப்பப்பட்டுள்ள நிலையில், அதன் பின் உள்ள சரித்திரத்தைத் தெளிவாகக் கூறும் நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.