எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

எம்முள் மறைந்த கரிசல்

கிராமங்களின் கதையை கண்முன் நிறுத்துகிறது இந்த நூல்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2024, 10:01 am

DIN

'எம்முள் மறைந்த கரிசல்' ஆசிரியர் - முனைவர் ந.நாராயணசாமி; பக். 440; ரூ.660; புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிட்., பெங்களூரு-560 076; ✆74185 55884.

தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்பட்ட கோவில்பட்டி அருகேயுள்ள கோபாலபுரம் என்னும் சிற்றூரில் பிறந்த நூலாசிரியர். காந்தி கிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 40

ஆண்டுகளுக்கு மேலாக பேராசிரியராகப் பணியாற்றிய அவர், நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளையும், 15-க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.

தான் பிறந்த கோபாலபுரத்தைப் பற்றியும் அந்த ஊர் மக்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றியும், கரிசல் மண் குறித்தும், அழகான வியப்பூட்டும் பல வரலாற்று தகவல்களை உள்ளடக்கி இந்நூலை மூன்று பகுதிகளாக அற்புதமாகப் படைத்துள்ளார்.

செல்போன், டி.வி., டிஜிட்டல் யுகம் இல்லாத காலத்தில் கோபாலபுரம் கிராமத்தில் இருந்து வாழ்வியல் நடைமுறைகள், வீடுகள்தோறும் இருந்த உழைப்பு, விவசாயம், உள்ளார்ந்த அன்பு என அரை நூற்றாண்டுக்கு முந்தைய கிராமத்து மண்வாசனையை யதார்த்தமாகச் சொல்லி படிக்கும் ஆவலை தூண்டுகிறது.

முதல் பகுதியில், 'கரிசல் மண் மிகுந்த மாவட்டங்களின் பட்டியல் அந்த மண் இல்லாத கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்கள் பற்றிய விவரம், குடியேற்ற வரலாறு' போன்ற

விவரங்கள் வியக்க வைக்கின்றன. இரண்டாம் பகுதியில், 'வாழ்வியல் கூறுகளும்', 'பெண்கள் நிலை', 'வேளாண்மை', 'சுகாதாரம், உணவு முறை' என யதார்த்தத்தைப் படிக்க முடிகிறது.

மூன்றாவது பகுதியில், 'கோபாலபுரம் கிராமம் மாறியது எப்படி?', 'மாற்றத்தால் ஏற்பட்ட தாக்கங்கள்', 'விவசாயம் குறைந்தது எப்படி?', 'மக்கள்தொகை குறைந்தது', 'உணவு முறை

மாற்றம்' போன்ற மாற்றங்களால் கிராமமும் கிராமத்து மக்களும் எப்படி மேம்பட்டுள்ளனர் என்பதோடு, பாதிக்கப்பட்டதையும் எடுத்துரைத்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.