எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

வ.வே.சு.ஐயர்

44 ஆண்டு காலத்தில் பன்முகத்தன்மையைப் பெற்றிருந்த மாமனிதரின் வீர வாழ்க்கை மிகவும் சுவாரசியமாகவும் எளிய நடையிலும் எழுதப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2024, 9:44 am

DIN

வ.வே.சு.ஐயர் - அனந்தசாய்ராம் ரங்கராஜன்; பக். 168; ரூ. 200; சுவாசம் பதிப்பகம், சென்னை-73: ✆81480 66645.

ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா, மேடம் காமா, வீரசாவர்க்கர், டி.எஸ்.எஸ்.ராஜன், எம்.பி.டி.ஆச்சார்யா ஆகியோருடன் லண்டனில் இந்தியா ஹவுஸில் தங்கி விடுதலைப் போரில் ஈடுபட்டவர் வ.வே.சு.ஐயர் எனப்படும் வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர். கர்சான் வில்லி என்ற ஆங்கிலேய அதிகாரியை இந்திய இளைஞர் மதன்லால் திங்ரா சுட்டுக் கொன்றதால், இந்தியா ஹவுஸில் இருந்தபடி நடத்திய விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.

சாவர்க்கர் கைதைத் தொடர்ந்து பாரிஸ் தப்பிச் சென்ற வ.வே.சு. ஐயர், மாறுவேடத்தில் இந்தியா வந்தார். போலீஸாரின் கண்களில் மண்ணைத் தூவி பிரெஞ்ச் ஆட்சிப் பகுதியான பாண்டிச்சேரிக்குத் தப்பினார். அங்கிருந்தபடி, அரவிந்தர், மகாகவி பாரதி ஆகியோருடன் தொடர்பு கொண்டு அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்ட அவர், 1920-இல் ஆங்கிலேய அரசு அளித்த பொதுமன்னிப்பை அடுத்து சொந்த ஊர் திரும்பினார்.

ஆரம்பத்தில் திலகர் அணியில் இருந்த அவர், இறுதிக்காலத்தில் மகாத்மா காந்தியின் அஹிம்சைக் கொள்கையுடன் இணங்கி காங்கிரஸில் இணைந்தார். ஐயரின் தேசிய சிந்தனை, சமயப் பற்று, பன்மொழிப்புலமை, ஜாதி பேதமற்ற கொள்கை, சீர்திருத்தக் கருத்துகள், கல்விப் பணி ஆகியவை நம்மை வியக்கச் செய்பவை. அவரது இலக்கியப் பணிகள் வளம் கூட்டுபவை. அவரது அகால மரணத்தால் அரசியல் களம் தீவிர தேசியவாதியை இழந்தது.

தான் வாழ்ந்த 44 ஆண்டு காலத்தில் பன்முகத்தன்மையைப் பெற்றிருந்த மாமனிதரின் வீர வாழ்க்கை மிகவும் சுவாரசியமாகவும் எளிய நடையிலும் எழுதப்பட்டுள்ளது. அற்புதமான வாழ்க்கை வரலாற்று நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.