பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பயணம் முடிவதில்லை

'அவள் ஒரு தொடர்கதை' திரைப்படத்தின் மூலக்கதை ஆசிரியரின் தொகுப்பு இது.

News image
Updated On :24 டிசம்பர் 2024, 11:44 am

DIN

பயணம் முடிவதில்லை-எம்.எஸ்.பெருமாள்: பக்.300;ரூ.300; வானதி பதிப்பகம், சென்னை-17: ✆044-24342810.

'அவள் ஒரு தொடர்கதை' திரைப்படத்தின் மூலக்கதை ஆசிரியரின் தொகுப்பு இது. 1961-ஆம் ஆண்டு முதல் வார, மாத, இதழ்களிலும், ஒலி-ஒளி ஊடகங்களிலும் சிறுகதை, குறுநாவல், நாடகம், கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர் எம்.எஸ்.பெருமாள். மொத்தம் 18 சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பில் கதைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு மாதிரியான களங்களைக் கொண்டிருக்கின்றன. கதை மாந்தர்களின் வட்டார வழக்கு எளிதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தனிக்குடித்தனத்திலும், கூட்டுக்குடும்பத்திலும் ஏற்படும் உறவு முறை சிக்கல்களும், பிற பிரச்னைகளும், சவால்களுமே கதைகளின் களங்களாக உள்ளன. குடும்பத் தலைவிகள் தங்களுடைய தியாகங்களாலும், பொறுமையாலும் பிரச்னைகளை எப்படிக் கையாள்கிறார்கள் என்பது பெரும்பாலான கதைகளில் சித்திரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கதையும் தொடங்கும்போது உள்ள வேகமும், நடையும் இறுதி வரை தொய்வின்றி தொடர்வது சிறப்பு. வாசகர்கள் யூகிக்கும் எந்த முடிவையும் கதைக்குத் தந்து விடாமல் வேறொரு முடிவைத் தருவது ஆசிரியரின் வளமையான கற்பனை வளத்தைப் புலப்படுத்துகிறது.

இத்தொகுப்பின் முக்கிய அம்சமாக, கதைகள் வெளியான காலகட்டங்களில் இருந்த தமிழறிஞர்கள், எழுத்துலக ஆளுமைகள், பத்திரிகை உலக ஜாம்பவான்கள் மற்றும் இலக்கியத்தின் முக்கிய ஆர்வலர்களிடமிருந்து கடிதங்கள் வாயிலாக இவருக்கு வந்த பாராட்டுகளையும், விமர்சனங்களையும் கதைகளுக்கு இடையே பதிவேற்றியிருப்பது ஒரு மாறுபட்ட அணுகுமுறையாக உள்ளது.

நவீன இலக்கியத்தின் வெளிப்பாடாக வரும் தற்கால சிறுகதைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பினும், இவரது கதைகள் ஓர் இதமான வாசிப்பு அனுபவத்தைத் தருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.