எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மலபார் புரட்சி (முதல் பாகம்)

News image
- SWAMINATHAN
Updated On :12 பிப்ரவரி 2024, 8:57 am

DIN

மலபார் புரட்சி (முதல் பாகம்), செ. திவான்; பக்.208; ரூ.220, நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை-17; ✆ 044-28343385.

மன்னர்களின் வம்சாவளி வரலாறு, வைசிராய்களுக்கு அப்பால் வரலாற்று ஆசிரியர்கள் கவனம் செலுத்துவார்களேயானால், நாட்டின் சுதந்திரத்துக்காகவும், முன்னேற்றத்துக்காவும் நடைபெற்று வந்த போராட்டங்களின் வரலாற்றில் உரிய இடத்தை உன்னத இடத்தை பெற்றவர்களின் வீர, தீர சாகசங்கள் அடங்கிய கருவூலங்களைக் காண முடியும். அந்த வரிசையில் இந்த நூல் சிறப்பிடம் பெறுகிறது.

அரேபிய ஆண்கள் கேரளப் பெண்கள் திருமண உறவால் உருவான 'மாப்பிள்ளா' இனத்தில், முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் யூதர்களும் உண்டு. கேரளத்தில் முஸ்லிம் மாப்பிள்ளாக்கள் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அஞ்சாது நின்று அயராது போரிட்டு தங்களது இன்னுயிரை அர்ப்பணித்ததை நூலில் விரிவாக பார்க்கலாம்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இராபர்ட் வில்லியம் டி.எஸ்.கார்ட் ஆஷ்ஷை வீர வாஞ்சிநாதன் 1911-ஆம் ஆண்டு ஜூன் 17-இல் சுட்டுக் கொன்ற வீர வரலாறு சரித்திரத்தில் பேசப்

படுகிறது. அந்தச் சம்பவத்துக்கு 56 ஆண்டுகளுக்கு முன்பே மலபாரில் மாப்பிள்ளாக்களுக்கு எதிரான கொடுமைகள் புரிந்த ஆட்சியர் குனாலியும் கொலை செய்யப்பட்டதும், அவரை கொன்றவர்கள் 12 மைல் தொலைவில் உள்ள கீரவல் அடுத்த தமரசேரி பள்ளிவாசலுக்குச் சென்ற தகவலும் வியப்பூட்டுகிறது.

மலபாரில் மாப்பிள்ளாக்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து திகைப்பூட்டக்கூடிய முறையில் பேரெழுச்சியுடன் போராடியுள்ளதை தேசம் அறிய வேண்டியதே நூலின் நோக்கம். வரலாற்று ஆர்வலர்கள் வாசிக்க வேண்டிய நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.