எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

DIN

மணிப்பூர் : கலவரமும் பின்னணியும் - விதூஷ்; பக். 128; ரூ. 170; சுவாசம் பதிப்பகம், சென்னை -127; ✆8148066645.

மெய்தி இன மக்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் தொடர்ச்சியாக, ஓராண்டுக்கும் மேலாக எரிந்துகொண்டும் புகைந்துகொண்டும் இருக்கும் மணிப்பூர் மாநிலத்தின் சிக்கலை விளக்கும் நூல். மணிப்பூரின் வரலாற்று நிகழ்வுடன் இந்தியாவுடன் இணைந்த காலத்தில் நேரிட்ட விளைவுகளையும் விளக்கும் நூலின் ஆசிரியர், பழங்குடி சமூகங்கள் எவ்வாறு பிளவுண்டிருக்கின்றன என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.

மக்களைக் கட்டுப்படுத்தக் கூடியதான ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் மணிப்பூரில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது என்பதை விவரிப்பதுடன் சிறப்பாகச் செயல்படுத்த யோசனையும் முன்வைக்கப்படுகிறது.

'இன்னர்லைன் பெர்மிட்' என்ற அரசியல் சிக்கல் பற்றி விவரிக்கப்படுவதுடன், மணிப்பூரின் சமூகப் பிரச்னைகளின் பெரும் பகுதி இனப் பிரச்னைகளிலிருந்து உருவாகின்றன; இனப் பிரச்னைகளை நிர்வாக நடவடிக்கை, சட்டங்களால் தீர்க்க முடியாது என்றும் குறிப்பிடப்படுகிறது.

மெய்தி, குக்கி, பைட் உள்பட பல்வேறு இனக் குழுக்களின் மோதல்களை விவரிக்கும் ஆசிரியர், இவற்றுக்கு இடையே நடப்பது மதரீதியிலானவை அல்ல என்கிறார். போதைப் பொருளான ஓபியத்துக்கும் ஒரு பெரும் பங்கிருக்கிறது என்றும் மியான்மரும் சீனாவும் எவ்வாறு சம்பந்தப்படுகின்றன என்பதும் விளக்கப்படுகின்றன.

வன்முறைகளால் உலகை இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ள மணிப்பூர் சிக்கல் பற்றிக் குறிப்பிட்ட கோணத்தில் விவரிக்கும் நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.