எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சிப்பாய்ப் புரட்சியில் உயிர்த்தியாகம் செய்த விடுதலை வீரர்கள்

சிப்பாய்ப் புரட்சியில் உயிர்த்தியாகம் செய்த விடுதலை வீரர்கள் - வி.என்.சாமி; பக்.152; ரூ.200; வி.என்.சாமி வெளியீடு, மதுரை-625 012; 96297 61984.

News image
Updated On :22 ஜூலை 2024, 4:01 pm

DIN

சிப்பாய்ப் புரட்சியில் உயிர்த்தியாகம் செய்த விடுதலை வீரர்கள் - வி.என்.சாமி; பக்.152; ரூ.200; வி.என்.சாமி வெளியீடு, மதுரை-625 012; 96297 61984.

வட இந்தியாவில் பிதூர் சமஸ்தானத்தை ஆட்சி செய்த இரண்டாம் பேஷ்வா மறைவுக்குப் பின்னர் அவருடைய தத்து மகன் நானா சாகிப்புக்கு உதவித் தொகை வழங்க ஆங்கிலேய அரசு மறுத்தது. இதன் காரணமாக, அவர் ஆங்கிலேயர்களை உறவாடி வீழ்த்த முடிவு செய்தார். இந்த நேரத்தில் ஆங்கிலேய சிப்பாய்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தங்களுக்கு வழங்கப்படவில்லையே என்று இந்திய சிப்பாய்களிடையே மனக்குமுறல்கள் இருந்தன.

ஜாதி, மத ரீதியாகப் பழிவாங்கி வந்த ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக, பாரக்பூர் எனும் இடத்தில் 1857-ஆம் ஆண்டு மார்ச் 29-இல் அணிவகுப்பு மைதானத்துக்கு எல்லைக் கோட்டைத் தாண்டிய நானா சாகிப் ஆங்கிலேயர்களைக் கண்மூடித்தனமாகச் சுட்டு இந்தியச் சுதந்திரப் போரைத் தொடங்கினார். இந்தப் போரை ஆங்கிலேயர்கள் அடக்கி, நூற்றுக்கணக்கான இந்திய வீரர்களைக் கொன்றனர்.

இந்த வரலாற்றையும், அவருக்கு உறுதுணையாக இருந்த அஜிமுல்லா கான், தாந்த்யா தோபே, பாண்டுரங்கராவ் என்கிற ராவ் சாகிப், பகதூர்ஷா, பகீரத்வர்கீர், சர்ஜூபிரசாத் சிங் உள்ளிட்

டோரின் வரலாற்றையும், இதர வீரர்களின் வாழ்க்கைக் குறிப்பையும் விரிவாக எடுத்துரைக்கிறது இந்த நூல். புரட்சிக்குப் பின்னர், அவர்கள் எதிர்கொண்ட சூழல்கள், நீதிமன்ற விசாரணைகளையும், போருக்கு முன்னும் பின்னும் சில ஆண்டுகள் நடைபெற்ற போராட்டங்களையும் நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.

வரலாறு, தேச ஆர்வலர்கள் வாசிக்க வேண்டிய நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.