எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

எதிர்காலத்தில் சாதிகள்

பகைமை, வெறுப்பு, அடிமைத்தனம் இன்றி அன்புடன் வாழ்வதே வாழ்க்கையின் நோக்கம்.

News image
Updated On :31 ஜூலை 2024, 1:28 pm

DIN

எதிர்காலத்தில் சாதிகள் - ப.செ.ராஜ்; பக்.368; ரூ.440; அறம் பதிப்பகம், ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம்; 632 316; ✆91507 24997

'பகைமை, வெறுப்பு, அடிமைத்தனம் இன்றி அன்புடன் வாழ்வதே வாழ்க்கையின் நோக்கம். அப்படியானதொரு சூழல் அமைந்தால் சாதி, சமூகக் கொடுமைகள் மறைந்துவிடும்' என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது. இதற்கு வலு சேர்க்கும் விதமாக திருவள்ளுவர், விவேகானந்தர் மகாத்மா காந்தி, அம்பேத்கர், பெரியார் உள்ளிட்டோர் மற்றும் சம காலத்தவர்களின் கருத்துகளையும் இந்நூல் பதிவு செய்துள்ளது.

நூல் முழுவதும் சாதிப் பாகுபாடுகள், தீண்டாமை, தீண்டாமை வடிவங்கள் குறித்து ஏராளமான விஷயங்கள் விரவிக் கிடக்கின்றன. ஏழைகளாக உள்ள அனைவருக்குமே அரசு, தனியார் வேலைவாய்ப்புகளில் ஒதுக்கீடு பெற வழி வகுக்க வேண்டும் என்ற நூலாசிரியரின் கருத்து வரவேற்கத்தக்கது.

'ஜனநாயக இந்தியாவில் சாதிப் பாகுபாடுகளும், சாதிய வன்முறையும் ஓயவில்லை. மத நம்பிக்கைக்கும் சாதி முறைக்கும் உள்ள தொடர்புதான் இதற்கு காரணமா? சாதி - மதத் தொடர்பு உண்மையானதா? கற்பனையானதா? சமூக நீதி எல்லா குடிமக்களுக்கும் எப்போது கிடைக்கும்?' என்பன போன்ற பல்வேறு கேள்விகளை அலசி ஆராய்வதோடு மட்டுமல்லாது அதற்கான விடையையும் தேட முற்பட்டிருக்கிறது இந்நூல்.

இந்தியச் சமூகம் சாதிகளால் பிளவுபட்டுள்ளது. மனிதாபிமானம் என்பதை மனதில் நிலைநிறுத்தி தீமையான சாதிய பாகுபாட்டை கைவிட இந்நூலாசிரியரால் தொகுக்கப்பட்டிருக்கும் கருத்துகள் இந்திய ஒற்றுமைக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.