எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சைக்கிள்

சில படைப்புகள் மீது மட்டுமே அத்தகைய ஈர்ப்பும், பந்தமும் இருக்கும்.

News image
Updated On :31 ஜூலை 2024, 1:31 pm

DIN

சைக்கிள் (சிறுகதைகள்) - ராசி அழகப்பன்; பக். 124; ரூ.150; பேஜஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை-119; ✆91768 04412.

பொதுவாக, சிறுகதைகளானது குறும்படம் பார்த்த திருப்தியை ஏற்படுத்தும். அதிலும், மண்மணத்துடன் வாழ்வியல் நிகழ்வுகளைக் கதைகளாகப் படைக்கும்போது, வாசகர்களும் அந்தக் கதையுடன் பயணித்து தங்களையும் இணைத்துப் பார்ப்பார்கள். சில படைப்புகள் மீது மட்டுமே அத்தகைய ஈர்ப்பும், பந்தமும் இருக்கும். அப்படியொரு இணைப்பு இந்தச் சிறுகதை தொகுதியில் இருக்கிறது. மொத்தம் 12 கதைகள்.

'மனப்பாசி'- இருளர் சமுதாய மக்களின் பிரச்னைகளை முன்வைத்து உருவான படைப்பு, அவர்களின் வாழ்விடங்களை அபகரிக்கும் போக்கை தடுக்கும் நிகழ்வுகளை அழகாகப் படைத்திருக்கிறார்.

கடைசி வரை காதல், சிறுகதை பள்ளிப்பருவத்து காதல் பற்றியது. அந்தக் காதலனும் காதலியும் விதிவசத்தால் வேறு திருமணங்கள் செய்து பிறகு பல ஆண்டுகள் கழித்து சந்திக்கும்போது மெய்யாய் தொடரும் தருணங்களை அனுபவபூர்வமாகத் தந்திருக்கிறார்.

இப்படி ஒவ்வொரு கதையும் சமுதாயத்தையும், யதார்த்த வாழ்வில் நிகழும் சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு படைத்திருப்பது படிக்கப் படிக்க ருசிகரமாய் இருக்கிறது.

12-ஆவது சிறுகதை சைக்கிள். இந்தக் கதைதான் இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கத்தில் வெளிவந்த 'குரங்குபெடல்' திரைப்படம். அன்று சைக்கிள் வாங்குவது எவ்வளவு சிரமம், அதை ஓட்ட 1980, 1990-களில் சிறுவர்களாக இருந்தவர்கள் எத்தனை பிரச்னைகளைச் செய்தனர் என்பதை இந்தக் கதையை படிக்கும் ஒவ்வொருவருக்கும் நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. மனதை இதமாக்கும் கதைகள் இவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.