எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

காகிதப் புரட்சி

புத்தகத் திருவிழா - கண்காட்சிகளில் மக்கள் சிந்தனைப் பேரவை அமைப்பாளர் த.ஸ்டாலின் குணசேகரன் நிகழ்த்திய உரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 உரைகளின் தொகுப்பு.

News image
Updated On :31 ஜூலை 2024, 1:11 pm

DIN

காகிதப் புரட்சி (புத்தகத் திருவிழா உரைகள்) - த. ஸ்டாலின் குணசேகரன்; பக். 534; ரூ. 600; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-50; ✆044 - 26251968.

புத்தகத் திருவிழா - கண்காட்சிகளில் மக்கள் சிந்தனைப் பேரவை அமைப்பாளர் த.ஸ்டாலின் குணசேகரன் நிகழ்த்திய உரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 உரைகளின் தொகுப்பு.

இந்த உரைகளில் பேராசான்களால் நூல்களில் பதிவு செய்யப் பெற்ற தகவல்களுடன், பெரிய மனிதர்களின் நினைவுகளும் பகிரப்படுகின்றன.

சுதந்திரப் போராட்டத்துக்கு கை, கால், தலை கொடுத்த சாமிகள் பற்றி ஐ. மாயாண்டி பாரதி கூறியது ஒரு சோற்றுப் பதம்.

விவேகானந்தரின் சிகாகோ உரை எத்தகைய சூழலில், எவ்விதம் நிகழ்த்தப்பட்டது என்பதை மிகச் சிறப்பாக விவரிக்கும் அதே உரையில் தலைவர்களைச் சாதிச் சிறைகளிலிருந்து விடுவிக்கவும் அழைப்பு விடுக்கிறார். சேலத்தில் நாலாயிரம் பேர் இருந்த பள்ளி மாணவர்கள் கூட்டத்தில் ஒருவரிடம்கூட பாரதியார் கவிதைகள் நூல் இல்லை என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிடுகிறார்.

காந்தியடிகளுக்கும் டால்ஸ்டாய்க்குமான தொடர்பைக் குறிப்பிடும்போதே பழ. நெடுமாறனின் காலத்தை வென்ற காவிய நட்பு நூலை அறிமுகப்படுத்துகிறார். ஆனந்தரங்கம் பிள்ளையைச் சொல்லிக்கொண்டே ஸ்டீபன் ஹாக்கிங் பற்றித் தொடருகிறார்.

நேர்காணல் ஒன்றில் விடுதலை வேள்வியில் தமிழகம் நூலை விருட்சம் என்றால் விதை எது? என்ற கேள்விக்கு இவர் தெரிவிக்கும் பதில் கல்வியுலகம் கற்றறிந்துகொள்ள வேண்டியது.

உரைகளில் புத்தகங்கள் பற்றிய அறிமுகங்களுடன், வாழ்க்கை பற்றிய அனுபவங்களும் புதுப்புதுத் தகவல்களும் காணக் கிடைக்கின்றன; வரலாற்று நூலை வாசித்த மன

நிறைவையும் தருகின்றன. நூல் நெடுக தமிழ்ச் சமுதாயம் மறந்துவிடக் கூடிய, மீண்டும் மீண்டும் நினைவூட்டப்பட வேண்டிய எண்ணற்ற பெருமக்களைப் பற்றிய மிகச் சிறப்பான அறிமுகங்கள்.

ஒரே நேரத்தில் பல நூல்களையும் மனிதர்களையும் வாசித்து அறிவதற்கான வாசல் திறப்பு இந்த நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.