முதுமை ஒரு வரம்

முதுமை ஒரு வரம் - டாக்டர் என்.பத்ரி; பக். 160; ரூ.250; முக்கடல் வெளியீடு, சென்னை-91; ✆94443 65642.
மிக சுவாரஸ்யமாக முதுமை, முதியோர் நலன் பற்றி எழுதப்பட்ட 50 கட்டுரைகளின் தொகுப்பு. பல கட்டுரைகள் முதியோர்களுக்கு கூறுவதாக இருந்தாலும், இந்த நூலை இளைஞர்களும் கையில் எடுத்தால் படித்து முடிக்காமல் கீழே வைக்க மாட்டார்கள்.
கூட்டுக் குடும்பமுறை கலைந்து போனதில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் முதியோர்கள்தான். சுயமாகச் சம்பாதிக்கும் பருவத்தைக் கடந்துவிட்ட அவர்களில் பலர் தங்களைத் தாங்களே தாங்கிப்பிடித்துக் கொள்ளக் கூடிய பொருளாதார வலுவற்று உள்ளனர். பிள்ளைகளின் ஆதரவு இல்லாததால் மனரீதியான, உடல் ரீதியான துயரங்கள் இருந்தாலும், மரணம் அதிக தொலைவில் இல்லை என்ற பருவத்தை அடைந்து விட்டிருந்தாலும், மன அமைதியை காப்பது எப்படி? எந்த ஓர் இடத்திலும் கசப்பும் பிறர் மீது கோபமும் வெளிப்படாத அருமையான சிந்தனை, இதன் பக்கங்கள் முழுவதும் நறுமணம் போல் பரவி உள்ளது. அயர்ச்சி தராத செயல்பாடுகளை சலிப்பு தோன்றாத எளிய நடையில் நயமாகச் சொல்லித் தருகிறார் நூலாசிரியர்.
'கூட்டுக் குடும்பம் சிதறுவதற்கு நாம் காரணமாக இருக்கக் கூடாது; உங்களை யாராவது புண்படுத்தி இருந்தால் மன்னியுங்கள்; நீங்கள் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேளுங்கள்; வெறுப்புகளை உங்களுக்குள்ளேயே சுமந்து செல்லாதீர்கள்; யார் சரி என்பது இப்போது முக்கியமில்லை; மனதுக்குள் பழிவாங்கும் உணர்ச்சியை மறந்துவிட வேண்டிய வயது இது' போன்ற வைர வரிகள் பல இடங்களில் பளிச்சிடுகின்றன. முதுமைக் காலத்துக்கு உடலை தயார்படுத்திக் கொள்வது அவசியம்; மனதை தயார்படுத்திக் கொள்வது அதைவிட முக்கியம் என்பதை இந்த நூல் உணர்த்துகிறது. அனைத்துத் தரப்பினரும் படிக்க வேண்டிய நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...