எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

DIN

படைப்பிலக்கியம் - சுப்பிரமணி இரமேஷ்; பக். 192; ரூ. 200; ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை - 606 806; ✆ 9159933990.

இலக்கியத்தின் முக்கியக் கூறுகளான கதை, கவிதை, நாடகங்களின் தொடக்க கால முயற்சிகள் முதல் இன்றைய வளர்ச்சி வரை சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்நூலில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.

மரபுக்கவிதை குறித்த கட்டுரையில், தொடக்கத்தில் கவிதையானது செய்யுள் என்றே அழைக்கப்பட்டது என்பதைப் புறநானூற்றுப் பாடலின் துணை கொண்டு விளக்கும் இவர், பரிபாடலில்தான் முதல் முதலில் 'கவிதை' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிறார். பின் கம்பர் 'சான்றோர் கவியென' எனக் கூறியதையும், கவிதைக்கு கவிமணி தரும் விளக்கத்தையும் குறிப்பிடுகிறார். மேலும், கவிதைக்கு இன்றியமையாததாகிய யாப்பிலக்கணத்தையும் தொட்டுக் காட்டியுள்ளார்.

புதுக்கவிதை பகுதியில், தொடக்கத்தில் புதுக்கவிதைக்கு இருந்த ஆதரவையும் எழுந்த எதிர்ப்பையும் சுட்டிக்காட்டியுள்ளார். புதுக்கவிதைக்கு அப்பெயரைச் சூட்டியவர் க.நா.சு. என்பதும், புதுக்கவிதையை எதிர்த்த பண்டிதர்களைச் சாடிய புதுமைப்பித்தனும் புதுக்கவிதை மீது அதிருப்தியே கொண்டிருந்தார் என்பதும் சுவையான செய்திகள்.

சிறுகதை குறித்த பகுதியில், தமிழில் சிறுகதை முயற்சி, அதன் தொடர்ந்த வளர்ச்சி, சிறுகதைக்குத் தேவையான கதைப்பின்னல், பாத்திரத்தேர்வு, முடிவு, தலைப்பு போன்றவற்றையும் விரித்துரைத்துள்ளார். நாடகம் என்கிற பகுதியில், தொடக்க காலத்தில் நாடகத்திலும் நடனத்திலும் பாடல்களே அதிகம் இடம்பெற்றிருந்ததால் இரண்டும் ஒன்றாகவே கருதப்பட்டன என்பதையும், பின் நாடகம் உரைநடை வடிவமாக மாறியதால் தனித்த கலையாகப் பரிணமித்தது என்பதையும் விளக்கியுள்ளார்.

வட்டாரப் படைப்புகள் பகுதியில் 'நாகம்மாள்' ஆர். சண்முகசுந்தரம் பெயரும், வெகுஜன படைப்புகளிலும் தீவிர இலக்கியத்திலும் இயங்கியவர்கள் பட்டியலில் ஜெயகாந்தன் பெயரும் ஏனோ விடுபட்டுள்ளன. இலக்கிய வகைப்பாடுகளை அறிய சிறந்ததொரு நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.