சோ.தர்மன் வாழ்வும் படைப்பும்

சோ.தர்மன் வாழ்வும் படைப்பும் - கோ.சந்தனமாரியம்மாள்; பக்.148; ரூ.160; யாப்பு வெளியீடு, சென்னை- 76; ✆ 90805 14506.
கோவில்பட்டியைச் சேர்ந்த சோ.தர்மன் பத்தாம் வகுப்புப் படித்துவிட்டு பஞ்சாலைத் தொழிலாளியாக வாழ்வைத் தொடங்கினார். பின்னர், தமிழ் நிலத்தின் கரிசல் வட்டார மனிதர்களின் வாழ்வியல், சமூக, நில வரைவியலை தனது படைப்புகளின் வாயிலாக உயிர்ப்புடன் புலப்படுத்தி, 2019-இல் சாகித்திய அகாதெமி விருதும் பெற்று இலக்கிய உலகில் ஆளுமையாக மிளிர்கிறார். அவருடைய வாழ்வியல், படைப்புகள் சமூகச் செயல்பாடுகள் ஆகிய மூன்று தலைப்புகளில் பேராசிரியரான நூலாசிரியர் அருமையாக விளக்கியுள்ளார்.
இலக்கிய ஆளுமையின் ஆரம்பக் கல்வி, இளமைக்காலப் பிரச்னைகள், குடும்ப நிலை, அவருடைய வளர்ச்சிக்கு வித்திட்டோர் என்று வாழ்க்கைக் கதையைப் படிக்கும்போது, சோதனைகளைச் சாதனைகளாக்கியுள்ளார் தர்மன் என்பது புலனாகிறது.
அவருடைய படைப்புலக மனிதர்களின் சமூக மனக்கோலங்கள், நிலம் சார்ந்த பண்பாட்டுப் பின்புலங்கள், சமூகச் செயல்பாடுகளை வாசிக்கும்போது, அவருடைய வாழ்வியலையும், படைப்புகளையும் ஆழமாகவும் விரிவாகவும் அறிந்து கொள்ள முடிகிறது.
ஒரு படைப்பாளியின் எழுத்துலகுக்குள் பயணப்படுவதற்கு இந்த நூல் பேருதவியாக இருப்பதோடு, தர்மனின் மொத்த நூல்களின் சுருக்கத்தை ஒற்றை நூலில் அறியவும் நல்வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...