ஹைதராபாத் நாவல்கள்

ஹைதராபாத் நாவல்கள் - சுப்ரபாரதிமணியன்; பக். 446, ரூ.480; காவ்யா, சென்னை- 24; ✆ 98404 80232.
திருப்பூரில் பிறந்து வளர்ந்த நூலாசிரியர் சுப்ரமணியன் என்னும் சுப்ரபாரதிமணியன் தான் ஹைதராபாத்தில் பணியாற்றியபோது, அதன் பின்னணியில் நிகழ்ந்த சம்பவங்களை மையமாக வைத்து நாவல்களை படைத்துள்ளார்.
அந்த வகையில் இந்த நாவலும் ஹைதராபாத்தின் வாசனை விரவிக்கிடக்கிறது. அந்த மண்ணின் தன்மை, ஹுசைன் சாகர் ஏரியின் அழகு, அங்கு வாழும் தமிழர்களின் மன நிலை, மத வழிபாட்டு நடைமுறைகள், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களின்போது ஹைதராபாத்தின் ஹுசைன் சாகர் ஏரியில் நடைபெறும் சிலைகள் கரைப்பு நிகழ்வுகளும் அதன் தாக்கமும், நடுத்தர, ஏழை குடும்ப தலைவர்களின் வாழ்வியல் சிரமங்கள் போன்ற அனைத்தையும் கதாபாத்திரங்கள் வாயிலாக தனக்கே உரிய பாணியில் நாவலாகப் படைத்திருக்கிறார் நூலாசிரியர்.
இதில், 'மற்றும் சிலர்' என்ற பெயரிலான நாவல் படித்தவர்களின் மனதில் புதிய கதையாய் சிந்தனையாகத் தொடங்கும் தாக்கம் மிகுந்ததாக உள்ளது. இந்த நூலில் இடம் பெற்றுள்ள 'நகரம்' ஒரு வார இதழில் தொடராக வந்தது. எழுத்தாளர் சுஜாதா தேர்வு செய்து பரிசளித்தது. இதில் இடம் பெற்றுள்ள சுடுமணல் கதையும் நீர் பிரச்னைக்காகத் தமிழர்கள் இடம் பெயர்தல் தொடர்பான பின்னணியை அடிப்படையாகக் கொண்டது. மண்மணத்துடன், நாவல் படிக்க விரும்புவோருக்கு இந்த ஹைதராபாத் நாவல்கள் விருந்து படைக்கும். உண்மைச் சம்பவங்களைக் கொண்டது. தமிழ் நூல் உலகில் புதியதொரு முயற்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...