ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

DIN

அயோத்திப் பெருமாள்: தமிழ் மரபில் இராம கதை - கோகுல் சேஷாத்ரி; பக்.500; ரூ.400; பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-14; ✆ 73585 95111.

'ஆதி காவியம்' என்று புகழப்பட்டு, இந்தியாவின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாக உள்ள ராமாயணம் தொடர்பான தமிழ் மரபுகளை வரலாற்று ரீதியாக, விரிவாக ஆராயும் நூல் இது. வட தேச தசரத ராமனின் அயோத்தியுடன் தென்னாட்டு ராமன் திருக்கோயில்களின் தொடர்பை விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கிறது.

ராமன், ராகவன் உள்ளிட்ட பெயர்களில் நெடுங்காலம் தமிழகத்தில் வழிபடப்பட்டு வந்துள்ள பல ராமர் கோயில்களை 'திரு அயோத்தி' என்று அழைத்து வந்தமையை சான்றுகளுடன் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் இராம கதை மரபுகள், வழிபாடு குறித்த ஆய்வு நூலாக அமைந்துள்ளது.

சங்க இலக்கியத்தில் வீரனாக கூறப்பட்ட இராமன், பின்னர் எழுந்த காப்பியங்களில் திருமாலின் அவதாரமாக குறிப்பிடப்படுவதையும் நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

தமிழ் பண்பாட்டு மரபில் ராம சரிதத்தின் நீட்சியை பல இலக்கிய, கல்வெட்டு, திருக்கோயில் அமைப்பு சான்றுகளுடன் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். பராந்தக சோழன் குறித்த முனைவர் பட்டப்படிப்புக்காக தொடங்கிய ஆராய்ச்சி, தசரதராமனின் தமிழக பண்பாட்டு மரபு குறித்த நூலாக நிறைவடைந்து இருக்கிறது. மிகவும் நிறைவான மரபு ஆய்வு நூல். வரலாற்று ஆய்வை விரும்புபவரை மட்டுமல்லாமல் பொது வாசகரையும் வசீகரிக்கும் நூலாக அமைந்துள்ளது.

ஆன்மிகம், வரலாற்று ஆர்வலர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.