வரலாற்றில் ஐயம்பேட்டை
தற்கால இளைஞர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களுக்கு பல புதிய செய்திகளை தெரிந்து கொள்வதற்கான ஒரு வழிகாட்டி இந்நூல்.

வரலாற்றில் ஐயம்பேட்டை: என்.செல்வராஜ்; பக்.280; ரூ.325; கிழக்கு பதிப்பகம்; சென்னை -14; ✆ 95000 45609.
தமிழகத்தின் ஒவ்வொரு சிற்றூரும் பல்வேறு வரலாற்று சுவடுகளை தனக்குள் புதைத்துள்ளது. அந்த வகையில் இந்திய வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஐயம்பேட்டை எனும் சிற்றூருடன் தொடர்புபடுத்தி நூலாக படைத்துள்ளார். ஒரு ஊரின் வரலாறு அதன் மாவட்ட வரலாற்றையும் விஞ்சக்கூடும் என்பதை இந்நூல் நிரூபித்துள்ளது.
ஐயம்பேட்டையில் அமைந்துள்ள கோயில்கள் மூலம் அந்த ஊரின் நம்பிக்கை, கலாசாரத்தை காண முடிகிறது.
சோழர் ஆட்சி முதல் நாயக்கர், மராத்தியர், ஆங்கிலேயர் ஆட்சி வரை ஐயம்பேட்டை ஊரும், மக்களின் வாழ்க்கையும், கலை பண்பாட்டு வளர்ச்சி அடைந்த மாற்றத்தையும் பல்வேறு வழிகளில் திரட்டி எழுதியிருக்கிறார் நூலாசிரியர். ஒரு கிராமத்தின் வரலாற்றில் புலம்பெயர்தலையும் அதன் தாக்கத்தையும் பதிவு செய்துள்ளது சிறப்பு.
அப்படி தெலுங்கு பிரதேசத்தை பூர்விகமாக கொண்ட பட்டு சாலியர், குஜராத்தை பூர்விகமாக கொண்ட செüராஷ்டிர மக்கள் தமிழகத்தில் குடியேறியதன் பின்னணி, அதன்பின் நிகழ்ந்த சமூக மொழி மாற்றங்களை விரிவாக விளக்கியுள்ளார். சுதந்திர போராட்டத்தின் முக்கிய நிகழ்வான உப்பு சத்தியாகிரகத்தில் ஐயம்பேட்டையில் நடந்த நிகழ்வு ஒரு மாறுபட்ட கண்ணோட்டத்தை வழங்குகிறது. இப்படிப் பல வரலாற்றுக் கேள்விகளுக்கான விடைகளை கல்வெட்டு, இலக்கியம் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்களின் வழி விவரிக்கிறார் நூலாசிரியர். வரலாற்றை மாறுபட்ட கோணத்திலும், சிறு கட்டுரைகளை நாவல் வடிவிலும் அமைத்திருப்பது தனி சிறப்பு. தற்கால இளைஞர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களுக்கு பல புதிய செய்திகளை தெரிந்து கொள்வதற்கான ஒரு வழிகாட்டி இந்நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...