எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

போட்டித் தேர்வு பதினைந்தும் புதிது

போட்டித் தேர்வு எழுதுவோர் மட்டுமல்ல; இல்லங்கள், கல்விநிலையங்கள்தோறும் இருக்க வேண்டிய அத்தியாவசியமான நூல்.

News image
Updated On :2 செப்டம்பர் 2024, 1:13 pm

DIN

போட்டித் தேர்வு பதினைந்தும் புதிது- முனைவர் இரா.திருநாவுக்கரசு; பக்.158; ரூ.150; தமிழோடு நாம், மதுரை-19; ✆75981 68854.

குடிமைப்பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தேர்ச்சி பெறும் நோக்கில், ஐ.பி.எஸ். அலுவலரான நூலாசிரியர் எழுதிய வழிகாட்டுதல் நூலாகும். முக்கிய சாதனையாளர்களின் வாழ்க்கை நிகழ்வுகளோடு, தனது சொந்த அனுபவத்தையும் இணைத்து திருக்குறள்களோடு மேற்கொள்காட்டியிருப்பது சிறப்பு.

சோர்ந்து கிடக்கும் இளையதலைமுறையினருக்கு புத்துணர்வு அளிப்பதோடு, போட்டித் தேர்வர்களுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் அளிப்பதோடு அவர்கள் வெற்றியாளராகவும் சாதனையாளராகவும் மாற வழிகோலும் வகையில் இந்த நூலை எளிய நடையில் விறுவிறுப்பாக எழுதியுள்ளார் ஆசிரியர்.

போட்டிக்கு எப்போதும் தன்னை தயார் நிலையில் வைத்திருத்தல், தோல்வியைக் கண்டு மனம் தளராமல் இருத்தல், தோல்வியில் இருந்து பாடம் கற்றல், வெற்றி பெறும் வரை தொடர்ந்து போராடுதல் என்ற நான்கு பகுதிகளில், எண்ணற்ற தகவல்களை அள்ளி தெளித்துள்ளார்.

தொடங்குவதற்கு முன், வலிமை, சுற்றம் தெரிந்துகொள், வியூகமே விஸ்வரூபம், சவாலைச் சமாளி, உடலே உறுதுணை, கட்டுக்குள் மனது, வெற்றிச் சமன்பாடு, தொடர் முயற்சி, 10 ஆயிரம் மணி நேரம், காலமே சுவாசம், கற்றல் என்பது 3 ஆர், மாதம் 1%, நேற்று இன்று நாளை, தேர்வுக்கு முன் உள்ளிட்ட 15 தலைப்புகளில் உள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் சாதனையாளர்களாக மாற்றுவதற்கான உத்வேகத்தை அளிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.