அவள் அவன் மேக்கப்
குடும்பத்தினர் ஒருசேர வாசிக்கும் வகையில் அமைந்திருப்பது இந்த நூலின் சிறப்பு.

அவள் அவன் மேக்கப் - கனலி; பக்.112; ரூ.160; ஹெர் ஸ்டோரிஸ், சென்னை - 4; ✆75500 98666.
அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல விஷயங்களில் அளப்பரிய மாற்றங்களை அடைந்து வரும்வேளையில், பெண்கள் குறைவாகவே மதிப்பிடப்படுகிறார்கள். அவர்களுக்கான சுய அடையாளம் மறுக்கப்பட்டு, ஓர் ஆணின் வழிதான் அவள் அறியப்படுகிறாள். தங்களுக்கான ஒரு சிறு உரிமையைக் கூட அவர்கள் போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது. சின்னச் சின்னக் கொண்டாட்டங்கள் கூட அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன; அதைக் கூட அறியாமல் வாழ்வதுதான் பெண்களின் பரிதாபம்.
இதனை ஒரே நாளில், ஒரே நிமிஷத்தில் எல்லாம் மாற்றிவிட முடியாது. மாறாக, ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தால் முன்னேற இயலும். அதற்கான ஓர் அடியாக இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது.
ஹார்மோன்களின் கலகம், அவள் என்ன செய்யப் போகிறாள்?, அலைபாயும் மனம், சகிக்கப் பழகுவோம், எல்லோரும் கொண்டாடுவோம், அவள்...அவன்...மேக்கப் உள்ளிட்ட 21 அத்தியாயங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் பெண்களின் சுய சம்பாத்தியம், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் முக்கியத்துவம், பிடித்த ஆடைகளை அணிவதில் உள்ள சுதந்திரம், பெண்ணடிமைத் தனத்தை தூக்கிப் பிடிக்கும் விளம்பரங்கள் என பல்வேறு விஷயங்கள் குறித்து அலசி ஆராய்கிறார் நூலாசிரியர்.
அத்துடன் துப்புரவுத் தொழிலாளிகளை மரியாதையுடன் நடத்துவது, பொருளாதாரச் சூழ்நிலையை குழந்தைகளுக்கு புரிய வைப்பது, சமூக மேம்பாட்டுக்கு துணை நிற்பதே அன்றாட வாழ்வில் நிகழும் பொதுவான நிகழ்வுகள், பிரச்னைகள் அதற்கான தீர்வுகள் குறித்தும் விவரிக்கிறது இந்த நூல். குடும்பத்தினர் ஒருசேர வாசிக்கும் வகையில் அமைந்திருப்பது இந்த நூலின் சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...