எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

திருவிளையாடல்

ஆன்மிக ஆர்வலர்கள் வாசிக்க வேண்டிய நல்லதொரு நூல் இது.

News image
Updated On :2 செப்டம்பர் 2024, 1:03 pm

DIN

திருவிளையாடல் - பின்னலூர் மு.விவேகானந்தன்; பக். 160; ரூ. 175; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-4; ✆93805 30884.

இறைவனே சாதாரண மனிதனாகத் தோன்றி திருவிளையாடல்களை நிகழ்த்திய மண் தமிழகத்திலுள்ள மாமதுரை. மதுரையை ஆண்ட மலையத்துவசப் பாண்டிய மன்னனின் மகளான மீனாட்சியை ஈசனே சோமசுந்தரராக வந்து திருமணம் செய்தார் என்பதும், அதற்காக அவர் நடத்திய திருவிளையாடல்களும் பக்திச்சுவையின் உச்சங்கள்.

ஈசன் தனது பக்தர்களுக்காக இரங்கி நிகழ்த்திய 64 திருவிளையாடல்களும் கர்ண பரம்பரைக் கதைகளாக சமூகத்தில் நிலவி வந்தன. அவற்றை பிற்பாடு பல புலவர்கள் நூலாக்கி இருக்கின்றனர். அவர்களின் அடியொற்றி, 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணம் என்ற செய்யுள் இலக்கியத்தைப் படைத்திருக்கிறார்.

மதுரைக் காண்டம், கூடற் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என மூன்று காண்டங்களையும், 65 படலங்களையும் கொண்டதாக திருவிளையாடற் புராணம் விளங்குகிறது. அந்த நூலுக்கு உரைநடைச் சுருக்கத்தை வழங்கி இருக்கிறார் எழுத்தாளரும் வழக்குரைஞருமான பின்னலூர் மு.விவேகானந்தன். இந்நூலுக்கு நீதியரசர்கள் வெ.இராமசுப்பிரமணியன், ஆர்.மகாதேவன் ஆகியோர் அணிந்துரை வழங்கியுள்ளனர்.

பக்தி உணர்வும், தமிழ்ச் சுவையும் கூடிய அற்புதமான தமிழ் இலக்கியத்துக்கு காலத்துக்கேற்ற எளிய உரைநடைச் சுருக்கத்தை நூலாசிரியர் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது. நூலின் இடையே முக்கியமான பாடல்களும் ஆங்காங்கே அணி செய்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.