கலியுகத்தின் கடவுள் ஐயப்பன்
சபரிமலை யாத்திரை மேற்கொள்வோர் அறிய வேண்டிய தகவல்கள் ஏராளம் உள்ளன.

கலியுகத்தின் கடவுள் ஐயப்பன் - டி.கே.எஸ்.கலைவாணன்; பக். 168; ரூ.170; வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17.
ஐயப்ப சுவாமியின் புராண சரித்திரம், பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விரதம், பக்தி நெறிமுறைகள், சபரிமலை யாத்திரைப் பாதைகள் உள்ளிட்டவற்றை எளிதில் புரியும் வகையில் 10 கட்டுரைகளாகத் தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர்.
'ஐயப்பன் எனும் நாமத்தை உச்சரித்தாலே நமது உடலும், உள்ளமும் ஒருசேர சிலிர்க்கும் பக்தி உணர்வை அனுபவித்தாலே உணர முடியும்' என்ற ஆன்மிக உணர்வைப் பெற விரும்புவோர் படிக்க வேண்டிய நூலாகவே இது அமைந்துள்ளது.
விரதத்தின் முக்கியத்துவம், அதனால் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கான சாத்தியம், விரதக் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்கள், உணவு முறைகள், உடைகள், உறக்கம், குளியல், வழிபாடு என அனைத்து நிலைகளிலும் அறிவியல் பூர்வமான பார்வையில் விளக்கப்பட்டுள்ளது.
ஐயப்பன் நடந்து சென்ற எருமேலி பாதையே பாரம்பரியப் பாதையாக கூறும் நூலாசிரியர், பம்பை பாதை ஏற்படுத்தப்பட்டதையும் ஆவணங்களோடு விளக்கியுள்ளார்.
எருமேலிப் பாதையில் 56 கி. மீட்டரில் உள்ள முக்கிய இடங்கள், அதன் சிறப்புகளைப் படிக்கும்போது, நேரில் காணும் வியப்பை ஏற்படுத்துகிறது.
சபரிமலையின் அருகேயுள்ள பிற புராணகால இடங்கள், யாத்திரை செல்வோர் அட்டைப்பூச்சி முதல் ஆபத்தான விலங்குகள் வரையில் எந்த இடங்களில் எவற்றை சந்திக்கும் நிலை போன்ற தகவல்கள் அவசியம் அறிய வேண்டியவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...