எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மகாதேவ தேசாய் (காந்தியின் நிழல்)

முக்கியமானவரான மகாதேவ தேசாயின் வாழ்க்கை வரலாறே இந்த நூல்.

News image
Updated On :10 செப்டம்பர் 2024, 9:08 am

DIN

மகாதேவ தேசாய் (காந்தியின் நிழல்) - தி.விப்ர நாராயணன்; பக். 208; ரூ.220; பவித்ரா & மித்ரஸ் பதிப்பகம், கோவை-38; ✆87789 24880.

குருவை விஞ்சும் சிஷ்யனாக, மகாத்மா காந்தியின் நிழலாக, காந்தியின் நீட்சியாக, காந்தி குறித்த பதிவுகளை மிகவும் நுணுக்கமாகப் பதிவு செய்ததில் மிகவும்

முக்கியமானவரான மகாதேவ தேசாயின் வாழ்க்கை வரலாறே இந்த நூல்.

காந்திஜியோடு இணைந்து பணியாற்ற பெரும் விருப்பத்தோடு காத்திருந்த தேசாய்க்கு, காந்தியிடமிருந்து அழைப்பு வந்தது முதல் தனது இறுதி மூச்சு வரை காந்தியிடமிருந்து பிரிக்க முடியாதவராக, தந்தை - மகன் போன்ற உறவாக வாழ்ந்து, காந்தியின் மடியிலேயே உயிர் துறந்த தேசாயின் வாழ்க்கை போற்றுதலுக்கு உரியது.

தேசாய் இறந்தவுடன் அவரது உடலை எரித்த சாம்பலை காந்தியடிகள் தினமும் பூசிக் கொண்டிருந்தார் என்னும் தகவல் அவரின் அன்பால் காந்தி எந்த அளவுக்கு ஆட்கொள்ளப்பட்டிருந்தார் என்பதை வெளிப்படுத்துகிறது.

காந்திஜியின் செயலாளராக மட்டுமல்லாது, தோழனாக, நேருக்கு நேர் விவாதம் செய்து இடித்துரைக்கும் நண்பராக, அவருடன் போராட்டங்களில் பங்கேற்று சிறைக்குச் செல்லவும்

தயங்காதவராக, ஆசிரமத்தின் அனைத்துப் பணிகளிலும் ஈடுபடுபவராக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டார் மகாதேவ தேசாய்.

'காந்தியின் மகன் மகாதேவ் தேசாய்' என்று ஆச்சாரிய வினோபா பாவேவும், 'மகாதேவ தேசாய் காந்தியின் மறு உடல்' என்று இராஜாஜியும், 'மகாதேவ் இருப்பதால் என்னால் இரண்டு மடங்கு வேலைகளை செய்ய முடிகிறது' என்று காந்திஜியே சிலாகிக்கும் அளவுக்கு தேசாய் என்ன தியாகம் செய்தார், எப்படி செயலாற்றினார் என்பதற்கான நிகழ்வுகள் நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன.

தேசாயின் வாழ்க்கை வரலாறும், தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பொருளும் ஒன்றுதான். இந்த நூல் சேவையில் தன்னையே இழந்தவரின் வரலாறு மட்டுமல்ல; ஒரு செயலாளர் எப்படி இருக்க வேண்டும் என்று எடுத்துக்காட்டாக வாழ்ந்தவரின் வரலாறும் கூட.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.