மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

புதுச்சேரியில் பிரஞ்சிந்திய வரலாற்றுத் தடயங்கள்

படிப்போரை நேராக புதுச்சேரி பகுதிக்கே அழைத்துச் சென்று காட்டுவது போல நூல் இருக்கிறது.

News image
Updated On :30 செப்டம்பர் 2024, 12:50 pm

DIN

புதுச்சேரியில் பிரஞ்சிந்திய வரலாற்றுத் தடயங்கள், நா.இராசசெல்வம்; பக்.333; ரூ.300, செம்பியன் சேரம் பதிப்பகம், புதுச்சேரி - 605 008; ✆94860 09909.

'இன்றைய நிகழ்வு, நாளைய வரலாறு' என்பதன் அடிப்படையில் இந்நூல் பாண்டிச்சேரியாக இருந்து புதுச்சேரியாக மாறிய மண்ணின் கடந்த கால வரலாற்றை நினைவூட்டும் ஆவணப்பதிவாக உள்ளது.

அறுபது தலைப்புகளில் புதுச்சேரியின் ஆதி முதல் அந்தம் வரையிலான நிலையை பதிவாக்கியுள்ளார் நூலாசிரியர்.

அரிக்கமேடு எனும் கட்டுரையில், தற்போது அங்கு எஞ்சி நிற்பது பிரெஞ்சுக் கால கட்டட இடிபாடு என்பதை கூறுவதுடன், பல ருசிகரத் தகவல்களும் இடம் பெற்றிருக்கின்றன.

இங்குள்ள சாலை அமைப்புகள் பிரான்ஸ் மொழியில் புல்வார் என அழைக்கப்பட்டதையும், தற்போதும் அச்சொல் புழக்கத்தில் இருப்பதையும் நூலாசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆயி மண்டபம், ஆயி குளம், கடற்கரை காந்தி சிலையை சுற்றியுள்ள தூண்கள், செஞ்சித் தூண்கள், தேங்காய்த்திட்டு பகுதி உருவான விவரம் என நூலெங்கும் பல ஆச்சரியத் தகவல்கள் நிறைந்துள்ளன. கடற்கரையில் உள்ள கட்டைச்சுவர், பாரதி பூங்காக்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களும் வியக்கவைக்கின்றன.

புதுச்சேரியில் முதல் தனியார் மருத்துவமனை 1832-இல் தொடங்கப்பட்டது என்பதில் இருந்து 18- ஆம் நூற்றாண்டு முதல் தற்போது வரையிலான புதுச்சேரியை படம் பிடித்து காட்டுவது போலல்லாமல், படிப்போரை நேராக புதுச்சேரி பகுதிக்கே அழைத்துச் சென்று காட்டுவது போல நூல் இருக்கிறது.

இந்த நூலை முழுமையாகப் படித்தாலே அதை உணரமுடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.