கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

உணர்வு சூழ் உலகம்

மனித வாழ்க்கையில் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்களையும் சிக்கல்களையும் மிகச் சாதாரணமாக கடந்து போக வலியுறுத்துகிறது இந்நூல்.

News image
Updated On :8 ஏப்ரல் 2025, 10:59 am

DIN

உணர்வு சூழ் உலகம் - யாமினி; பக்.108; ரூ.150; ஹெர் ஸ்டோரிஸ், சென்னை-83; ✆ 96003 98660.

உணர்வுகளை வெளிக்காட்டுவது தவறு என்று நமக்குப் போதிக்கப்பட்டிருப்பதால், உணர்வுகளைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாமல், இறுதியில் ஒரு கட்டத்தில் அவை வெடித்துவிடுகின்றன. அதற்குப் பதிலாக, உணர்வுகளைச் சரியானமுறையில் வெளிப்படுத்தும்போதுதான் நம்மால் நம் இலக்கை மிக எளிதாக அடையலாம் என்கிறார் நூலாசிரியர்.

மகிழ்ச்சியோ, துக்கமோ, கோபமோ இவை போன்ற எந்த உணர்ச்சியையும் அவசரப்பட்டு வெளிப்படுத்தாமல் ஒரு சில நொடிகள் நிதானித்து திட்டமிட்டுப் பதில் வினையாற்றுவதுதான் எல்லாவற்றுக்குமான சிறந்த உணர்வுசார் நுண்ணறிவாக இருக்கும் என்று வலியுறுத்துகிறது இந்நூல்.

இந்நூலில் மனிதர்களை அவர்களுடைய குணத்தின் அடிப்படையில், முரடர், அடி பணிபவர், ஏற்றுக்கொள்பவர் என மூன்றுவிதமாகப் பிரித்து அம்மூன்று குணங்களின் விளைவுகளை ஒரு சிறுகதையாகச் சொல்லி அவற்றில் எது சிறந்தது என்பது புரிய வைக்கப்பட்டுள்ளது.

உணர்வு சார் நுண்ணறிவு என்பது தன்னை அறிவது, தன்னை நேசிப்பது என்பதில் தொடங்குவதாகக் கூறும் நூலாசிரியர், நடக்கும் நிகழ்வை எந்த முன் முடிவும் இல்லாமல், ஒரு சம்பவமாக பார்வையிட்டு நிதானித்து உணர்வைக் கையாளும்படி கூறுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.