திப்பு சுல்தான்
வாள்களின் முனையும், போர்களின் உக்கிரமும் எவ்வாறு இருக்கும் என்பதை கண் முன் காட்சியாக நிழலாட விட்டிருக்கிறது இந்நூல்.

திப்பு சுல்தான் -சுந்தர பாண்டியன்; பக்.156; ரூ.150; காவ்யா பதிப்பகம், சென்னை-24;- ✆ 044-2372 6882.
அதோ அந்தக் குதிரையின் மீது அமர்ந்து வந்து கொண்டிருப்பது ஒரு புலி. ஆம்! திப்பு சுல்தான்தான். அவன் தனியாக வருகிறான். அவனுக்குப் பின்னால் சிறிது தொலைவில் அவனது வீரர்கள் புலிக்கொடிகளுடன் வருகிறார்கள். அவன் முகத்தில் இனம் காண முடியாத இறுக்கம். கண்களில் சொல்ல முடியாத சோகம். உதடுகளில் துடித்துக் கொண்டிருக்கிற துயரம்.
நாளைய போரில் ஹம்பர்ஸ்டோன் நிச்சயமாக நிர்மூலமாகி விடுவான் என்றல்லவா நினைத்திருந்தான். அவனை வெல்லத்தானே தந்தையின் கட்டளையால், சீரங்கப்பட்டணத்தை விட்டு கேரளப் பகுதிக்குப் போனான். அதற்குள்... என மிகவும் பரபரப்பாக தொடங்குகிறது 'ஒரு புலியின் மரணம்' என்ற முதல் அத்தியாயம்.
ஆங்கிலேயருக்கு தென்னாட்டில் அனைத்து அரசுகளும் அடிபணிந்த நிலையிலும், எதற்கும் அஞ்சாமல் கர்ஜித்தவர் மன்னர் திப்புசுல்தான். அவரது வரலாற்றை மிக சுவாரஸ்யமாக படைத்திருக்கிறார் நூலாசிரியர். வாள்களின் முனையும், போர்களின் உக்கிரமும் எவ்வாறு இருக்கும் என்பதை கண் முன் காட்சியாக நிழலாட விட்டிருக்கிறது இந்நூல்.
மத வெறியைக் கண்டித்தவர்; மதுவிலக்கை கொண்டு வந்தவர்; ஜாதிக் கொடுமைகளை நீக்கியவர்; இஸ்லாமியராக இருந்தாலும் ஹிந்துக் கோயில்களுக்கும், கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் கொடை வழங்கியவர் என திப்புவின் பெருமைகளை நூல் விவரித்துக் கொண்டே போகிறது.
விடுதலை இயக்கங்கள் பெரும்பாலும் வீழ்ந்து போவதற்கான காரணங்கள், வெளிப்பகையை விட உட்பகைகள்தான் என்பது வரலாற்று உண்மையாகும். திப்புவுக்கும் இதுதான் நடந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...