

மொஸாட்-அண்ணல்; பக்.146; ரூ.180; சத்யா எண்டர்பிரைசஸ்; சூளைமேடு, சென்னை-600094. ✆ 044-45074203
ஒவ்வொரு நாடும் தங்களின் பாதுகாப்புக்கும், அச்சுறுத்தலுக்கு எதிர்வினை ஆற்றவும் உளவு நிறுவனங்களை அமைத்துள்ளன. இவற்றில் முதல் 10 வரிசையில் இஸ்ரேலின் 'மொஸாட்' உள்ளது. 1949-இல் நிறுவப்பட்ட இவ்வமைப்பு இஸ்ரேலின் உயர்நிலை பாதுகாப்பு அமைப்பு என்றால் மிகையில்லை.
மொஸாட்டின் நடவடிக்கைகள் அவ்வப்போது விமர்சனத்துக்கு உள்ளானாலும், சட்ட அங்கீகாரமின்றி நிகழ்ந்தாலும், அரசியல் பழிவாங்கும் செயல்களாக இருந்தாலும், அதன் ஒவ்வொரு செயலுக்கும் தேசியப் பாதுகாப்பை மட்டுமே காரணமாக இஸ்ரேல் முன்னிறுத்துகிறது.
மொஸாட்டின் மிக முக்கியமான நடவடிக்கைகளாகக் கருதப்படும் ஆபரேஷன் டைமண்ட், ஆபரேஷன் எண்டபீ, இரண்டாம் உலகப் போர் சமயத்தில் யூதர்களைக் கொன்று குவிக்க ஹிட்லருக்கு பக்கபலமாகச் செயல்பட்டு வந்த ஐக்மேனை ஆர்ஜென்டீனாவிலிருந்து கடத்தி இஸ்ரேலுக்கு கொண்டுவந்து தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது உள்ளிட்ட பல சாகச நிகழ்வுகள் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலில் அணுசக்தித் திட்டத்துக்குத் தேவைப்பட்ட மூலப்பொருளான யுரேனியத்தை பெல்ஜியத்தில் இருந்து தந்திரமாகக் கடத்தியதையும், ஈரானின் அணுசக்தித் திட்டம் தங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என நினைத்து, மொஸாட் மூலம் எதிர்நடவடிக்கைகளில் ஈடுபட்டதையும் காலவரிசைப்படி இந்நூல் தொகுத்துள்ளது.
இராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் இறுதி வீழ்ச்சிக்கு அமெரிக்கா, நேட்டோ படைகளின் துணையிருந்தாலும், இவர்களுக்குப் பின்னால் இருந்து அனைத்து உதவிகளையும் செய்தது இஸ்ரேலின் மொஸாட் உளவுப் பிரிவு என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒருபக்க சார்பின்றி மொஸாட்டின் செயல்பாடுகளை நீக்கமற எடுத்துரைக்கிறது இந்நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.