சாயல்

எளிமையாகவும் அதே நேரத்தில் சுவாரஸ்யமாகவும் அனைத்து சிறுகதைகளும் அமைந்திருக்கின்றன.
சாயல்
Updated on
1 min read

சாயல்-நிஷாந்தன்; பக்.136; ரூ.170; நாற்கரம் பதிப்பகம், சென்னை-600 073, ✆ 95510 65500.

இந்த சிறுகதை தொகுப்பின் ஆசிரியருக்கு ஏராளமான சிறுகதைகள் எழுதிய அனுபவம் உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான சிறுகதைகள் மெல்லிய நுட்பமான உணர்வுகளை தாங்கிய கதை மாந்தர்களுடன் பயணிக்கிறது. நவீன கால சிறுகதைகளின் வடிவங்களும், உள்ளீடுகளும் வெவ்வேறு மாதிரியான கட்டமைப்புகளுக்குச் சென்று விட்டன. இந்த காலகட்டத்தில் இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகளை வாசிக்கும்போது பிரபல இதழ்களில் வெளிவந்த கதைகளை வாசித்த அனுபவம் நமக்கு கிடைக்கிறது.

ஆசிரியர் ஏற்கெனவே பல நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்களில் சிறுகதைகளை எழுதியதுடன் மட்டுமல்லாமல், சிறுகதைப் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளையும் வென்றுள்ளார்.

கடமைக்கும் தர்மத்துக்கும் இடையே துடிக்கும் ஒரு வங்கி மேலாளரின் தவிப்பு, திருநங்கையாக மாறிய ஓர் உள்ளத்துக்கு ஏற்படும் அங்கீகார ஏக்கம், முரட்டுக் காசாளரின் மெல்லிய மனம் என சக மனிதர்களின் மனதில் இருக்கக்கூடிய நல்லவர்களை மட்டுமே வெளியே காண்பிக்கக் கூடிய ஒரு நேர்மறை சிந்தனை கொண்டவராக தனது சிறுகதைகளின் மூலம் தொகுப்பாசிரியர் வெளிப்படுகிறார்.

எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்ற அறம் சார்ந்த சிந்தனை கொண்டவர்களை இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் கவரும். எளிமையாகவும் அதே நேரத்தில் சுவாரஸ்யமாகவும் அனைத்து சிறுகதைகளும் அமைந்திருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com