நினைவு யாழ்

இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள் அனைவரும் வாசித்துப் புரிந்து கொள்ளும்படி உள்ளன.
நினைவு யாழ்
SWAMINATHAN
Updated on
1 min read

நினைவு யாழ்-ச.ஆனந்தகுமார்; பக்.130; ரூ.170; வேரல் புக்ஸ், சென்னை- 600 093, ✆ 95787 64322.

சிறிய சம்பவங்கள், ஓர் இரவு நேர மாற்றம், 20 ஆண்டுகள் நிகழ்வு, ஒரு சிறிய பயணம் என பல்வேறு காலகட்டங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், நிகழ்வை சொல்லும் விதத்தில் அனைத்துக் கதைகளும் அமைந்துள்ளன.

சிறுகதைகளைப் பொருத்தவரை இதுதான் அதற்கான வடிவம் என்ற வரைமுறை இப்போது இல்லை. வாசகருக்குப் புரியும் வகையில் ஒரு நிகழ்வை சுவாரஸ்யமான திருப்பங்களுடன் சொல்லும் போக்கு இப்போது சிறுகதைகளாக உருப்பெறுகின்றன. அந்த வகையில், சிறுகதைகள் நவீன இலக்கியத்தில் ஆங்காங்கே வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் இந்தத் தொகுப்பு இடம்பெறுகிறது.

நான்கைந்து வரிகளில் கவிதைகளாக முடிக்க வேண்டிய மையக் கரு நான்கைந்து பக்கங்களில் சிறுகதைகளாக விரிவடைந்துள்ளன. ஆனாலும், எல்லா கதைகளும் தொய்வில்லாமல் நகர்ந்து செல்கின்றன. பெண்ணியம், கர்மா, ஆழ்மன முரண்கள், குழந்தையின் உளவியல், நடைமுறை எதார்த்தம், வாழ்வின் கட்டவிழ்த்த போக்கு, ஏற்றுக்கொள்ளுதல் என சமகாலங்களில் மனித வாழ்வில் உணரப்படும் விஷயங்களைப் பிரதிபலிக்கின்றன இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள்.

நவீன இலக்கியப் பத்திரிகைகள், சிற்றிதழ்களில் வெளிவரக்கூடிய சிறுகதைகளில் இருக்கக்கூடிய புரிதலின்மையைத் தவிர்க்கும் விதத்தில் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள் அனைவரும் வாசித்துப் புரிந்து கொள்ளும்படி உள்ளன.

ஒரு படைப்பானது அந்தப் படைப்பை ரசிக்கும் ரசிகருக்கு மனதிருப்தியைத் தர வேண்டும். அதேபோல், ஒரு படைப்பை உருவாக்கும் உத்வேகத்தை தர வேண்டும்; அதுதான் நல்ல படைப்பின் சாராம்சம். அது இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகளில் வெளிப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com