சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தொல்காப்பியம் ஓர் கலை அறிவியல் களஞ்சியம்

ஏழு அகத்திணைகளையும் அறிவியல் நோக்கில் வரைபடமாக்கியும் காட்டியுள்ளார்.

News image
Updated On :10 பிப்ரவரி 2025, 1:17 pm

DIN

தொல்காப்பியம் ஓர் கலை அறிவியல் களஞ்சியம்; முனைவர் பொ.நா.கமலா; பக்.830; ரூ.850; காவ்யா, சென்னை-24; ✆ 044-2372 6882.

தொல்காப்பியத்தை அமைப்பியல் நோக்கில் விளக்கியிருக்கும் இந்நூலாசிரியர், 6 கட்டுரைகள் மூலம் சுமார் 31 தலைப்புகளில் அதனைப் பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் தெளிவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அகத்திணையியலில் 'திணை' என்பது நிலம் எனும் பொருளில் தொல்காப்பியத்தில் கையாண்டுள்ளதைக் கூறும் நூலாசிரியர், ஒழுக்கத்தையும் திணை குறிப்பிடுவதை நூற்பாக்களை சுட்டிக்காட்டி விளக்கியுள்ளார். ஏழு அகத்திணைகளையும் அறிவியல் நோக்கில் வரைபடமாக்கியும் காட்டியுள்ளார்.

'சங்கப் போர்க்குரிய படைக்கலன்கள்' எனும் தலைப்பிலான உள்ளடக்கத்தில் அரசுருவாக்கம் நிகழ்ந்த காலத்தில் தொல்காப்பியம் உருவாகியிருக்கலாம் என்ற கருத்தையும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். அதே பகுதியில் தொல்காப்பியத்தின் நோக்கம் அப்போதைய மக்களது புறவாழ்க்கையை விளக்குவதுடன், அதற்கான கோட்பாடுகளை வகுத்துரைப் பதுமாகும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்படியாக நூலெங்கும் புதிய புதிய நோக்கில் ஆய்வுத்தளங்களுக்கான கருத்துகள் பரவிக்கிடக்கின்றன. தொல்காப்பியரின் பருந்துப்பார்வை உள்ளிட்ட பல தலைப்புகளில் உள்ளடக்கங்கள் நவீன கால முறையில் அறிவியல் நோக்கில் தொல்காப்பியத்தை நூலாசிரியர் அணுகியிருப்பதை விளக்குவதாக உள்ளன. ஏற்கெனவே உள்ள தொல்காப்பிய ஆய்வு நூல்களிலிருந்து இந்நூலை இத்தகைய அணுகுமுறை தனித்துவப்படுத்தியிருப்பதை உணர முடிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.