சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அயல் மகரந்தம் : அ.முத்துலிங்கம் கட்டுரைகள்

சிற்பியின் ஒவ்வொரு கட்டுரையிலும் அவருடைய ஆழமான வாசிப்பு வெளிப்படுகிறது.

News image
Updated On :18 பிப்ரவரி 2025, 3:03 pm

DIN

அயல் மகரந்தம் : அ.முத்துலிங்கம் கட்டுரைகள் - ஒரு பார்வை சிற்பி பாலசுப்பிரமணியம்; பக்.128, ரூ.150, விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர்; 0422 - 2382614.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் இரு பெருந்தொகுதிகளாக வெளிவந்த எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் கட்டுரைகளைப் பற்றி அறிமுகமாகவும் விமர்சனமாகவும் எழுதப்பட்டுள்ள நூல்.

படைப்பிலக்கியத்தின் மொழியையும் வடிவத்தையும் எடுத்துக்கொண்டு ஒரு சிறுகதையாளர் எழுதியுள்ள இந்தக் கட்டுரைகளைத் தனித்தனித் தலைப்புகளில் வகைப்படுத்தித் தம் பார்வையில் முன்வைக்கிறார் ஆசிரியர்.

பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், நாஞ்சில்நாடன் என நால்வரைக் கட்டுரை வித்தகர்களாக அறிமுகப்படுத்தும் நூலாசிரியர், ஐந்தாவதாக முத்துலிங்கத்தை இவர்களினும் வேறுபட்ட திறன்களுக்கு அடையாளமாக விளங்குபவர் என வரையறுக்கிறார்.

ஆப்பிரிக்கா பற்றிய முத்துலிங்கத்தின் எழுத்துகளை வாசிக்கத் தரும்போது, சோமாலியாவின் இருபது நாள்கள் கணக்கைப் போல உள்ளம் உருக்கும் பல தகவல்களைத் தருகிறார்.

புத்தகப் பிரபஞ்சத்தின் வழி எண்ணற்ற அறிந்த, அறியாத எழுத்தாளர்களும் அவர்களின் புகழ்பெற்ற எழுத்துகளும் எழுத வாய்த்த சூழ்நிலைகளும் தெரிவிக்கப்படுகின்றன.

உள்ளம் கவர் புள்ளிகளில் பல்வேறு எழுத்தாளர்களிலிருந்து நடிகை பத்மினி வரையிலும் எண்ணற்றோரைக் குறிப்பிட்டு, சிவாஜியை திருமணம் செய்துகொள்ளாததற்கு பத்மினி கூறிய காரணத்தையும் கட்டுரையிலிருந்து எடுத்துக்காட்டுகிறார் ஆசிரியர்.

மொழியின் விளையாட்டில் ஆவலான வதை போன்ற முத்துலிங்கத்தின் சொற்கோவைகள் தேடித் தேடித் தரப்படுகின்றன. சிற்பியின் ஒவ்வொரு கட்டுரையிலும் அவருடைய ஆழமான வாசிப்பு வெளிப்படுகிறது.

அ. முத்துலிங்கத்தின் பல்வேறு முகங்களையும் காட்டும் கட்டுரைகளை அறிமுகப்படுத்தி வாசிக்க வழிகாட்டுகிறது இந்த நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.