சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நெக்சஸ்

இதுவரை நிகழ்ந்த தகவல் பரிமாற்ற வளர்ச்சியை மிக விரிவாக இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்.

News image
Updated On :24 பிப்ரவரி 2025, 9:23 am

DIN

நெக்சஸ் - யுவால் நோவா ஹராரி; தமிழில்: நாகலட்சுமி; பக்.548; ரூ.799; மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், இரண்டாவது தளம், உஷா பிரீத் காம்ப்ளெக்ஸ், 42, மாள்வியா நகர், போபால்-462 003.

மனிதகுலம் தோன்றிய காலத்திலிருந்து தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. உலகத்தில் இதுவரை நிகழ்ந்த மாபெரும் புரட்சிகளுக்குக் காரணமாக அரசியல்ரீதியான, சித்தாந்தரீதியான, பொருளாதாரரீதியான விளக்கங்களே கொடுக்கப்பட்டுள்ளன. தகவல்கள் பரிமாற்றரீதியாகவும் அவை விளக்கப்பட வேண்டும் என்கிறார் நூலாசிரியர்.

தகவல்கள்தான் மனிதர்களின் கருத்துகளைத் தீர்மானிப்பவையாக உள்ளன. மனிதகுலத்தின் கருத்தியல் மூதாதையர் காலத்தில் கட்டுக்கதைகளாக, மாயைகளாக இருந்திருக்கின்றன. அது நமது காலம் வரை தொடர்கிறது. பொய்களையும் கட்டுக்கதைகளையும் அடித்தளமாகக் கொண்டுதான் சர்வாதிகார ஆட்சிகள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன; கட்டமைக்கப்படுகின்றன.

மதம் சார்ந்த புனிதநூல்களின் கருத்துகள் மனிதர்களின் தவறிழைக்கும் தன்மையைக் கையாள்வதற்கான ஒரு தொழில்நுட்பமாக இருந்திருக்கின்றன. எழுத்து, அச்சு, வானொலி போன்றவை மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொண்டவிதத்தில் மாற்றங்களை ஏற்படுத்தின.

இன்றைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்று வருகிறது. தகவல் பரிமாற்றங்கள் இப்போதும், வருங்காலத்திலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கொண்டே நடைபெறும்.

கூகுள், ஃபேஸ்புக், அமேசான் போன்ற பெருநிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தங்களுக்குப் போட்டியாளர்கள் இல்லாமல் செய்துவிடுகின்றன. சிறிய நிறுவனங்கள் அவற்றுடன் போட்டியிட இயலாத நிலை உருவாகி உள்ளது.

செயற்கை நுண்ணறிவால் அதிகாரத்தின் வல்லாட்சிக்கு ஆதரவான தகவல்களால் மக்களை மூழ்கடித்து, அவர்களைத் திக்குமுக்காடச் செய்து தவறான ஆட்சிமுறைக்கு ஆதரவாளர்களாக மக்களை மாற்ற முடியும். செயற்கை நுண்ணறிவைப் பற்றிய துல்லியமான வரலாற்றுப் பார்வையை வழங்குவதுதான் தனது நோக்கம் என்று கூறும் நூலாசிரியர், இதுவரை நிகழ்ந்த தகவல் பரிமாற்ற வளர்ச்சியை மிக விரிவாக இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.