பொதிகைமலைச் சாரல் (தென்காசி மாவட்ட எழுத்தாளர்களின் கட்டுரைகள், சிறுகதைகள்) - தொகுப்பாசிரியர்கள்: நாறும்பூநாதன்,வேலாயுத முத்துக்குமார்; பக்.496; ரூ.300; மாவட்ட நிர்வாகம், தென்காசி.
தமிழ் இலக்கியத்துக்கு தங்களது பெரும் பங்களிப்பைத் தந்த, இப்போதும் தந்துகொண்டிருக்கும் தென்காசி மாவட்ட படைப்பாளிகளின் கட்டுரைகள் மற்றும் சிறுகதைகளின் தொகுப்பு இப்புத்தகம். 13 கட்டுரைகளும் 38 சிறுகதைகளும் கொண்ட இத்தொகுப்பில் செங்கோட்டை ஆவுடையக்காளின் சித்தாந்தப் பாடலின் வழியேஅழைத்துச் செல்கிறார்கள் தொகுப்பாசிரியர்கள்.
பாரதி குறித்து செல்லம்மாள் பாரதி ஆற்றிய வானொலி உரையான முதல் கட்டுரையை வாசிக்கும் போது பாரதி போற்றிய பெண்ணுரிமைக்கான நீட்சி செல்லம்மாளின் சொல்லாடலில் தெரிகிறது . தமிழ் இலக்கிய உலகம் பெருமை கொள்ளும் உயர்ந்த படைப்பாளர்களும் அவர்களின் ஆகச் சிறந்த முக்கிய கட்டுரைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
தினமணியின் முதல் ஆசிரியரான டி.எஸ். சொக்கலிங்கம் எவ்வாறு அந்தப் பொறுப்புக்கு வந்தார், அவரோடு ஏ.என். சிவராமன் எவ்வாறு இணைந்தார் என்கிற தகவல்கள் சுவாரஸ்யம்.
ரசிகமணியின் ரசனை, தேவநேயப்பாவாணரின் மதம் குறித்த பார்வை ஆகியவற்றை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. கழனியூரனின் இஸ்லாமிய நாட்டாரியலில் இஸ்லாமிய தாலாட்டு நம் மனதில் ஓர் இணக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழ் இலக்கிய ஆர்வலர்களால் தவிர்க்க முடியாத கட்டுரைகள் கொண்ட இத்தொகுப்பில் சிறுகதைகளின் அணிவகுப்பும் நம்மைப் பிரமிக்க வைக்கிறது.
சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் சிறுகதைகள், கவிஞர்களாகப் புகழ்பெற்ற விக்கிரமாதித்யன், கலாப்ரியா ஆகியோரின் யதார்த்தமான சிறுகதைகள் மற்றும் புதிய படைப்பாளிகளின் சிறுகதைகளும் இடம் பெற்றுள்ளன. நவீன தமிழ் இலக்கியத்தின் சிறந்த ஆவணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வரப்பெற்றோம் (02.03.2026)

இந்த வாரம் கலாரசிகன் - 01-03-2026

திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் ரூ.93 லட்சம் மதிப்பில் நிழற்கூரை
தொல்லியலும் வரலாற்றுச் சான்றுகளும்
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...