இன்றைய இசையும் நாடகமும்
இசை, நாடகத் துறைகளில் ஈடுபட்டுள்ளோர் வாசிக்க வேண்டிய நல்லதொரு நூல் இது.

இன்றைய இசையும் நாடகமும் - முனைவர் அ.பிச்சை; பக்.272; ரூ.320; நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ், மதுரை-20; ✆ 90803 30200.
சென்னையில் 1980-84-களில் நூலாசிரியர் பணிபுரிந்தபோது, தொலைக்காட்சி நாடகத்தின் வாயிலாக எழுத்தறிவின் சிறப்பை ஒளிபரப்பினார். இளம்வயதில் அவருக்கு நாடகத்தின் மீது ஏற்பட்ட ஆர்வமே இலக்கிய வரலாற்று நூல்களில் தகவல்களைச் சேகரித்து நூலாக்கியுள்ளார்.
'இசை எனும் சொல் ஓரறிவு முதல் ஆறறிவு படைத்த மனிதர்கள் வரை தன்வயப்படுத்தும் ஆற்றல் கொண்டது', 'தற்காலத்தில் கர்நாடக இசையானது பண்பட்ட இசை, நிருத்திய இசை, சாஸ்திரிய இசை எனலாம். தாளக் கட்டுப்பாடு, பண் அமைப்பு, கருத்துச் சிறப்பு கொண்டது', 'மரக் கருவியால் பூட்டப்படும் யாழ் பழங்காலத்தில் உன்னத இடத்தில் இருந்தது'. '1920-1970 வரையில் இசைத் தட்டுகள் புழக்கத்தில் இருந்தன', 'கு.சா.கிருஷ்ணமூர்த்தி இயற்றிய 'இசையின்பம்' எனும் நூலில் இறையும், இசையின்பப் பாடல்களும் நிறைந்துள்ளன', 'சங்கீதக் கலையை தமிழின் வாயிலாக வளர்க்க வேண்டும்', 'சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகங்கள் வரலாற்று சகாப்தம்', 'கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பாகவதமேளா நாடகம்', 'யதுகுலகாம்போதி, கமாஸ் ராகங்களில் அமைந்த பாடல்கள்', 'தஞ்சாவூர் அருகே சில கிராமங்களில் 140 ஆண்டுகளாக நடத்தப்படும் சிறுதொண்டர் இசை நாடகம்', 'மு.வரதராசனின் ஓரங்க நாடகங்கள்' உள்ளிட்ட எண்ணற்ற கட்டுரைகளின் முடிவுகளாக, தனது கருத்துகளை அழகுற பதிவு செய்துள்ளார். கட்டுரைகளும் நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
இலக்கியமும் இசையும், இசை நாடகம், திரையிசை, விடுதலைக்குப் பின் நாடகங்கள், கவிதை-மேடை நாடகங்கள், மின்னூடக நாடகங்கள், நாடகக் கலைஞர்களும் தயாரிப்பாளர்களும், புதிய நூற்றாண்டின் நாடக வளர்ச்சி, எதிர்காலத் தமிழ் நாடகம் என்று ஒன்பது தலைப்புகளில் மூன்று பகுதிகளாக எழுதப்பட்டுள்ள இந்த நூலில் தமிழர்களின் பாரம்பரியமான இசை, நாடகம் குறித்து முழு அளவில் அலசி ஆராயப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...