கிழக்காசிய வணிகத்தில் தமிழ் புத்தத்தின் தாக்கம்
டங்ஸ்டன் சுரங்கம் புகழ் அரிட்டாபட்டிக்குப் பெயர் வரக் காரணமான புத்த பிக்கு அரிட்டர் பற்றிய தகவலுடன் தொடங்கி, புத்தம் பற்றிய பல தகவல்களைத் தருகிறது இந்த நூல்.

கிழக்காசிய வணிகத்தில் தமிழ் புத்தத்தின் தாக்கம் - தி. பவள சங்கரி; பக்.144;ரூ.150; நெய்தல்வெளி, நாகர்கோவில்-2; ✆ 04652 - 229702.

கிழக்காசிய நாடுகளில் புத்தம் பரவிய விதம் பற்றிக் குறிப்பிடுவதுடன், சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் எத்தகைய சிக்கலை எதிர்கொண்டது என்பதும் விளக்கப்படுகிறது; கொரியாவில் பெற்றிருந்த செல்வாக்கும் பேசப்படுகிறது.
சீனத்துக்குப் புத்தத்தைக் கொண்டுசேர்த்த போதி தர்மர் பற்றியும் மணிமேகலை உணவு வழங்கியதாகக் கூறப்படும் காவிரிப்பூம்பட்டினத்திலுள்ள சம்பாபதியின் சக்கரவாளக் கோட்டம் பற்றியுமான தகவல்களும் தரப்பட்டுள்ளன.
தென்னிந்தியாவுக்கு வந்த ஐரோப்பியர்கள், மெக்சிகோ, பெரு போன்ற நாடுகளில் செய்ததைப் போல அழித்தொழிப்புகளைச் செய்யாமல் ஆராயத் தொடங்கியதற்கான விளக்கங்களை அடுக்கும் ஆசிரியர், கடல் வணிகம் பற்றியொரு சித்திரத்தையும் தருகிறார்.
தமிழ்நாடு, புதுவையிலுள்ள 127 புத்த தலங்கள் பற்றிய விவரங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டபோதிலும் கூடுதல் தகவல்கள் எதுவும் இடம் பெறவில்லை.
கொரிய ஆய்வாளர் கிம்மின் ஆய்வுகளின் அடிப்படையில் கொரியாவின் முதல் அரசி, இந்தியாவிலிருந்து வந்தவர் என்பதில் தொடங்கி, அவருடைய நினைவிடத்திலுள்ள இரட்டை மீன் சின்னம், இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் எங்கெங்கே இருக்கின்றன பற்றிய தகவல்களும் தரப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டம் பவானியில் நடைபெறும் சேற்றுத் திருவிழாவைப் போலவே கொரியாவிலும் நடைபெற்று வருவதைக் குறிப்பிடும் ஆசிரியர், இரு நாடுகளிடையேயான கூடுதல் பண்பாட்டுத் தொடர்புகளை விவரிக்கிறார்.
தமிழர்களின் பெருவழிப் பாதைகள், இரும்புப் பயன்பாடு பற்றியும் கொடுமணல் நாகரிகம் பற்றியும், நூலில் தலைப்புக்கு அப்பாற்பட்டும் பல்வேறு நூல்களிலிருந்து ஏராளமான தகவல்கள் திரட்டித் தரப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...