100 சிறந்த சிறார் கதைகள்
இந்நூல் குழந்தைகளுக்கானது மட்டுமல்ல, தன் குழந்தைகளுக்கு கதை சொல்லித் தூங்க வைக்கும் பெற்றோர்களுக்குமானதும்கூட.

100 சிறந்த சிறார் கதைகள் - சுகுமாரன்; பக்.368; ரூ.400; டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை-78; ✆ 99404 46650.
குழந்தைகளுக்குப் பிடித்தவை எவை என்று பட்டியலிட்டால் அதில் முதலிடத்தை ஐஸ்கிரீம் பிடிக்கும். அதற்கு அடுத்த இடம் கதைகளுக்குத்தான். கதை கேட்கப் பிடிக்காத குழந்தைகள் என்று யாருமில்லை. இந்நூல் அவர்களுக்கான தொகுப்பு.
மகாகவி பாரதியின் 'ஆனைக்கால் உதை கதை' யிலிருந்து தொடங்கி, 8-ஆம் வகுப்பு படிக்கும் சிந்துஜா எழுதிய 'கரடியும் கிளியும் மேகமும்' வரை 100 சிறார் கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளான தி.ஜ.ர.பெ.தூரன், ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, செ.யோகநாதன், பாவண்ணன், உதயசங்கர் ஆகியோரின் படைப்புகளுக்கிடையே குழந்தைகளின் படைப்புகளையும் இடம் பெறச் செய்திருப்பது இத்தொகுப்புக்கு பெருமை சேர்க்கிறது. இதில் சிறார்களுக்கான கதைகளும், சிறார்கள் பற்றிய கதைகளும் இடம் பெற்றுள்ளன.
இந்நூல் நம் சிறார் இலக்கியத்தின் பெருமையை எடுத்துக்காட்டுகிறது. 7-12 வயது வரையிலான குழந்தைகளின் வாசிப்புலகை மீட்டெடுக்கும் முயற்சியாக இத்தொகுப்பு உள்ளது. வாசிப்புப் பழக்கம் குறைந்துவரும் இக்காலத்தில் இது போன்ற நூல்கள் காலத்தின் தேவையை நிறைவு செய்வதாகும்.
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளை நாம் வாசிக்கும்போது, நம்மைச் சுற்றி காடுகள், மலைகள், ஆறுகள் மற்றும் விலங்குகளின் உலகம் நம் கண்முன் தோன்றும் பரவச அனுபவம் நமக்கு ஏற்படுகிறது.
நூலின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் மீன், முயல், மான், கிளி, யானை, மரம் என ஏதாவது ஒன்று நம்மிடம் பேசிக்கொண்டே இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...