மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வுமுதல்வர் விஜய்யுடன் மாணிக்கம் தாகூர் சந்திப்பு!போர்ப் பதற்றம்! ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு!கண்ணியத்துடன் பேசுங்கள்: சட்டப்பேரவையில் ஜேசிடி பிரபாகர் அறிவுறுத்தல்பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் வேட்டியின் அளவு 4 முழமாகக் குறைப்பு: அமைச்சர்டாஸ்மாக் ஊழியர்களுக்கு நாளைமுதல் ஊதிய உயர்வு!தவெக அரசுடன் சென்னை மேயர் சேர்ந்து செயல்படுவதில்லை: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டுகொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? டிடிவி தினகரன் கேள்வி! தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்புகொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு 2026 பிரதமர் வேட்பாளர் யார்? தமிழக அரசியலில் உருவான சூறாவளி!தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் அறிவிப்புபால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புநேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

எப்ஸ்டீன் ஃபைல்ஸ்

அமெரிக்க நீதித் துறையையே விலைபேசிய எப்ஸ்டீனை, அவரால் சூறையாடப்பட்ட சாமானியப் பெண்கள் பல ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு எப்படி வீழ்த்தி சட்டத்தின் முன் நிறுத்தினார்கள் என்பதை மிக விரிவாகவும், விறுவிறுப்பாகவும் பதிவு செய்துள்ளது இந்நூல்.

Published On :31 ஆகஸ்ட் 2026, 6:27 pm IST

எப்ஸ்டீன் ஃபைல்ஸ் - சி. வெற்றிவேல்; பக். 200; ரூ. 333; வானவில் புத்தகாலயம், சென்னை - 600 017. ✆ 044-2986 0070.

நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்து, பட்டப் படிப்பை பாதியில் கைவிட்டு, நியூயார்க்கின் புகழ்பெற்ற பள்ளியில் தனது சாமர்த்தியத்தால் கணித ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய ஜெஃப்ரி எப்ஸ்டீன், அமெரிக்காவின் பில்லியனராகவும், மேற்கத்திய அதிகார வர்க்கத்தை மிரட்டும் வகையில் ஒரு மாபெரும் "பாலியல் கடத்தல் மற்றும் பிளாக் மெயில்' சாம்ராஜ்யத்தை எப்படி உருவாக்கினார்? அவரது தனித்தீவு, சொந்த விமானம் மிக முக்கியமாக 'ஹனி ட்ராப்' வலைப்பின்னலின் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் மர்மங்களை இந்நூல் வெளிச்சம்போட்டு காட்டுகிறது.

உலகை ஆளும் பெரும் பணக்காரர்கள், சக்திவாய்ந்த உலக அரசியல்வாதிகள், பிரிட்டிஷ் அரச குடும்ப வாரிசுகள் உள்ளிட்டோரை தனது வலையில் வீழ்த்த, எப்ஸ்டீன் ஏழை, நடுத்தர வர்க்க இளம்பெண்களை பகடைக் காய்களாக பயன்படுத்தினார். இதனால், தான் ஒருபோதும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட மாட்டோம் என்கிற அசாத்திய நம்பிக்கையும் அவருக்கு இருந்தது.

அமெரிக்க நீதித் துறையையே விலைபேசிய எப்ஸ்டீனை, அவரால் சூறையாடப்பட்ட சாமானியப் பெண்கள் பல ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு எப்படி வீழ்த்தி சட்டத்தின் முன் நிறுத்தினார்கள் என்பதை மிக விரிவாகவும், விறுவிறுப்பாகவும் பதிவு செய்துள்ளது இந்நூல்.

அமெரிக்காவின் பாதுகாப்பான சிறையில் அடைக்கப்பட்ட எப்ஸ்டீன், எந்தவொரு நீதி விசாரணைக்கும் உள்படுத்தப்படாமல் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டார் என்கிற செய்தி அதிகார வர்க்கத்தின் குரூர முகத்தை வெளிப்படுத்துகிறது.

உலகின் மிக முக்கிய பிரமுகர்களின் அந்தரங்க ரகசியங்களை உள்ளடக்கியதும், நீதிமன்றத்தால் 'சீல்' உடைக்கப்பட்டதுமான 'எப்ஸ்டீன் ஃபைல்ஸ்' வெளிப்படுத்தும் ரத்தமும் சதையுமான உண்மைகள், உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.