மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வுமுதல்வர் விஜய்யுடன் மாணிக்கம் தாகூர் சந்திப்பு!போர்ப் பதற்றம்! ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு!கண்ணியத்துடன் பேசுங்கள்: சட்டப்பேரவையில் ஜேசிடி பிரபாகர் அறிவுறுத்தல்பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் வேட்டியின் அளவு 4 முழமாகக் குறைப்பு: அமைச்சர்டாஸ்மாக் ஊழியர்களுக்கு நாளைமுதல் ஊதிய உயர்வு!தவெக அரசுடன் சென்னை மேயர் சேர்ந்து செயல்படுவதில்லை: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டுகொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? டிடிவி தினகரன் கேள்வி! தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்புகொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு 2026 பிரதமர் வேட்பாளர் யார்? தமிழக அரசியலில் உருவான சூறாவளி!தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் அறிவிப்புபால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புநேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

சங்ககால மலர்கள்

சங்ககால மலர்கள் குறித்த இந்த நூலில், மலர்கள் குறித்த செய்திகளுடன் அவை சங்க இலங்கியங்களில் எங்கு, எவ்வாறு பயின்று வந்துள்ளன; அந்த மனிதர்கள் இயற்கையுடன் கொண்டிருந்த காதல், அறம் ஆகியவை புலப்படுகின்றன.

Published On :31 ஆகஸ்ட் 2026, 6:25 pm IST

சங்ககால மலர்கள்-டி.வி. ராதாகிருஷ்ணன்; பக். 160; ரூ. 200; வானதி பதிப்பகம், சென்னை-600 017, ✆ 044-2434 2810.

பத்துப்பாட்டில் இடம் பெற்றுள்ள குறிஞ்சிப்பாட்டில் புலவர் கபிலர் 99 வகையான மலர்களின் பெயர்களைத் தொடர்ந்து வரிசைப்படுத்தியுள்ளார். பொதுவாக பலரும் அறிந்த பெயர்களைத் தாண்டி, இந்த மலர்ப் பட்டியலுக்குப் பின்னால் சில சுவாரஸ்யமான மற்றும் அரிய செய்திகள் உள்ளன.

குறிஞ்சிப்பாட்டில் 62-ஆவது அடி முதல் 96-ஆவது அடி வரை உள்ள 35 அடிகளில் இந்த 99 மலர்களின் பெயர்களும் தொடர்ச்சியாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. பண்டைத் தமிழ் சமூகத்தில் இயற்கை மற்றும் தாவரவியல் மீதிருந்த ஆழமான அறிவுக்கு இந்த 99 மலர்ப் பட்டியல் சிறந்த சான்றாகும்.

குறிஞ்சி நிலத்துக்கு உரிய முதன்மை மலரான காந்தள் (செங்காந்தள்) மலருடன் இந்தப் பட்டியல் தொடங்குகிறது. புல் வகையைச் சேர்ந்த எருவை (எருவைப்பூ) என்ற மலருடன் பட்டியல் நிறைவடைகிறது.

தலைவனும் தலைவியும் சந்திக்கும் குறிஞ்சி நிலத்தின் வளத்தையும், அங்குள்ள சுனை நீரில் தோழியும் தலைவியும் நீராடிவிட்டுப் பாறையில் பரப்பி விளையாடிய மலர்களின் செழிப்பையும் காட்டவே கபிலர் இவற்றை வரிசைப்படுத்தினார். மேலும், "தமிழ் மொழியின் வளத்தையும், தமிழர்களின் இயற்கை சார்ந்த வாழ்வியலையும்' ஆரிய அரசனுக்கு உணர்த்துவதற்காகவே கபிலர் குறிஞ்சிப்பாட்டை இயற்றினார் என்பதால், தமிழரின் தாவரவியல் அறிவை வெளிப்படுத்த இத்தனை மலர்களைக் குறிப்பிட்டதாகக் கருதலாம்.

உ.வே.சாமிநாதையர், குறிஞ்சிப்பாட்டை ஓலைச்சுவடியிலிருந்து பதிப்பித்தபோது, தொடக்கத்தில் 96 மலர்களின் பெயர்கள் மட்டுமே அவருக்குக் கிடைத்தன. பின்னர், பல ஓலைச்சுவடிகளைத் தேடி அலைந்து, ஒரு குறிப்பிட்ட சுவடியில் இருந்து மீதமுள்ள 3 மலர்களின் பெயர்களையும் கண்டறிந்து, மொத்தம் 99 மலர்கள் என்பதை உறுதி செய்து பதிப்பித்தார்.

சங்ககால மலர்கள் குறித்த இந்த நூலில், மலர்கள் குறித்த செய்திகளுடன் அவை சங்க இலங்கியங்களில் எங்கு, எவ்வாறு பயின்று வந்துள்ளன; அந்த மனிதர்கள் இயற்கையுடன் கொண்டிருந்த காதல், அறம் ஆகியவை புலப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.