க.ப.அறவாணரின் திறனாய்வுகள்

சீனா, இலா.வோ.சி.படைப்புகளில் காணப்படும் பீகிங் நாட்டுப்புறப் பழக்கங்கள் நூல் மதிப்புரை போன்ற கட்டுரைகள் தமிழின் தொன்மைச் சிறப்புகளை மிகச் சிறப்பாக எடுத்துரைக்கின்றன.
க.ப.அறவாணரின் திறனாய்வுகள்
Updated on
1 min read

க.ப.அறவாணரின் திறனாய்வுகள்-பதிப்பாசிரியர் தாயம்மாள் அறவாணன், பக்.124; ரூ.150; தமிழ்க் கோட்டம், சென்னை-600 029, ✆ 044-2374 4568.

1968-ஆம் ஆண்டு முதல் அறவாணர் எழுதியுள்ள நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டன. அவர் எழுதிய அனைத்தும் நூலாகிவிட்டதாக அவரது மனைவி தாயம்மாள் நினைத்திருந்த வேளையில், முனைவர் தமிழ்வேலு அனுப்பிய இரு கட்டுரைத் தொகுதிகளில் 8 கட்டுரைகளையும், மேலும் 2 கட்டுரைகளையும் தேர்வு செய்து நூலாக்கியுள்ளார். பல்கலைக்கழகங்கள், பல்வேறு இலக்கிய நிகழ்வுகளில் சமர்ப்பிக்கப்பட்டவை.

3 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தமிழ் இலக்கிய வரலாற்றில், கடந்த மூன்று நூற்றாண்டுகளில் தோன்றிய தமிழ் இலக்கிய வளர்ச்சியை முழு அளவில் அலசி ஆராய்ந்துள்ள அறவாணரின் திறனாய்வுகள் தமிழ் மொழியின் சிறப்புகளை அறிய உதவுகின்றன.

இலக்கியம் கற்பித்தல், சங்க இலக்கியங்களில் மானுடவியல் கூறுகள், கல்வித் தமிழ், அருணகிரியாரும் தமிழும், மொழி நடையில்- வால்கர் கிப்சன் முறை ஓர் அறிமுகம், இரட்டைச் சகோதரர்களான ஆ.இராமசாமி முதலியார், ஆ.இலட்சுமணசாமி முதலியார் மற்றும் மு.வ. போன்றோர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகளை எடுத்துரைக்கும் அரியன செய்த ஆர்க்காட்டுப் பெரியோர்கள், டாக்டர் வா.செ.குழந்தைதசாமி எழுதிய வாழும் வள்ளுவம் நூல் பற்றிய மதிப்புரை, சீனா, இலா.வோ.சி.படைப்புகளில் காணப்படும் பீகிங் நாட்டுப்புறப் பழக்கங்கள் நூல் மதிப்புரை போன்ற கட்டுரைகள் தமிழின் தொன்மைச் சிறப்புகளை மிகச் சிறப்பாக எடுத்துரைக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com