சமூக ஜனநாயகக் கையேடு

வகுப்பறையுடன் நின்றுவிடாமல் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரும் வாசித்து விவாதிக்க வேண்டிய நூல் சமூக ஜனநாயகக் கையேடு.
சமூக ஜனநாயகக் கையேடு
Updated on
1 min read

சமூக ஜனநாயகக் கையேடு- பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு, பக்.136, ரூ.300, 14ஏ, சோலையப்பன் தெரு, சென்னை-600 017, ✆ 94456 83660.

இந்திய அரசமைப்புச் சட்டம் முன்வைக்கும் விழுமியங்கள் நமது வாழ்வியல் விழுமியங்களாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அது தொடர்பான செயல்பாடுகள் பாடத் திட்டத்தின் வாயிலாக வகுப்பறையில் நிகழ வேண்டும். அதற்கான மனநிலையை பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறையின் அனைத்து நிலைகளில் பணியாற்றுபவர்களும் பெற வேண்டும் என்பதை இந்த சமூக ஜனநாயகக் கையேடு அழுத்தமாக எடுத்துரைக்கிறது. இந்த நூலின் தயாரிப்புக்கு பேராசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த வல்லுநர்கள் தங்களின் அறிவையும் அனுபவத்தையும் கொண்டு சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

சமூகத்தை ஜனநாயகப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு விடைதரும் புத்தகமாக "சமூக ஜனநாயகக் கையேடு" அமைந்துள்ளது.

தமிழ்ச் சமூகத்தில் ஜாதியப் பாகுபாடு இருந்ததில்லை என்பதை வள்ளுவர் தொடங்கி வள்ளலார் வரை பலரையும் மேற்கோள் காட்டும் இந்தப் புத்தகம், அறிந்ததில் இருந்து அறியாதது என்ற கற்றல் முறையைப் பின்பற்றி தாவரங்கள், ரத்த வகைகள், நட்சத்திரங்கள் போன்ற ஒவ்வொரு பாடத்தின் வாயிலாகவும் ஜாதியத்தில் இருந்து மனதளவில் மாணவர்கள் விடுபட்டு கல்வியியல் செயல்பாட்டில் முழுமையான கவனம் செலுத்த பல்வேறு உரையாடல்களை முன்வைக்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை மாணவர்கள் உணர்ந்து சகோதரத்துவச் சிந்தனையை வளர்த்துக் கொள்ள பள்ளிப் பாடத்திட்டத்தின் வாயிலாக வகுப்பறை செயல்பாட்டில் கொண்டுவரத் தேவையான பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கி, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தயாரித்துள்ள இந்தக் கையேடு பலரின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது. வகுப்பறையுடன் நின்றுவிடாமல் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரும் வாசித்து விவாதிக்க வேண்டிய நூல் சமூக ஜனநாயகக் கையேடு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com